»   »  படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!

படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது 60வது படக்குழுவினருடன் பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகர் விஜய்.

இன்று ஜூன் 22-ம் தேதி விஜய்யின் 42வது பிறந்த நாளாகும். வழக்கமாக இந்த நாளின்போது, தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் பரிசளிப்பார் விஜய். தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்.

Vijay celebrates 42nd birthday at shooting spot

ஆனால் சமீப காலமாக பிறந்த நாள் கொண்டாட்டங்களை விமரிசையாக கொண்டாடுவதில்லை விஜய். அவரது ரசிகர்களும் அமைதியாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் பிறந்த நாளின்போதும் விஜய் தனது 60 வது படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

ஆனாலும் அவரது பிறந்த நாளை படக்குழுவினர் படப்பிடிப்புத் தளத்திலேயே கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர்.

Vijay celebrates 42nd birthday at shooting spot

படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ், நகைச்சுவை நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் பரதன் முன்னிலையில் விஜய் கேக் வெட்டினார். அனைவருக்கும் கேக்கை ஊட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

முன்னதாக நேற்று இரவே விஜய்யின் மனைவி, மகன்கள் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

English summary
Actor Vijay has celebrated his 42nd birthday at his 60th movie shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil