twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    25 வயசில் ரூ. 500 கூட இல்லை, ஆனால் இப்போ 'போர்ப்ஸ் 30'ல் ஒருவன்: விஜய் தேவரகொண்டா

    By Siva
    |

    Recommended Video

    போர்ப்ஸ் பட்டியலில் விஜய் தேவரகொண்டா- வீடியோ

    ஹைதராபாத்: 25 வயதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையான ரூ. 500 இல்லாததால் விஜய் தேவரகொண்டாவின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.

    அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் கோலிவுட் வந்தார். அவருக்கு ஆந்திரா, தெலுங்கானாவை போன்றே தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் குறிப்பாக ரசிகைகள் உள்ளனர்.

    இந்நிலையில் விஜய் தேவரகொண்டா ஒரு சாதனை படைத்துள்ளார்.

     விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    30 வயதுக்குள் பணக்காரர்கள் ஆன 30 இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிக்கை. அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

     பெருமை

    பெருமை

    போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நடிகர் விஜய் தேவரகொண்டா தான். அந்த பட்டியலில் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன.

    ஆந்திரா வங்கி

    25 வயதில் குறைந்த பட்ச இருப்புத் தொகையான ரூ. 500 இல்லாததால் என் கணக்கை ஆந்திரா வங்கி முடக்கியது. 30 வயதுக்குள் செட்டிலாகுமாறு அப்பா கூறினார். அப்படி செட்டில் ஆனால் தான் இளமையாக இருக்கும்போதே, பெற்றோர் ஆரோக்கியமாக இருக்கும்போதே வெற்றியை ரசிக்க முடியும் என்றார். 4 ஆண்டுகள் கழித்து போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளேன் என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

     ரசிகர்கள்

    ரசிகர்கள்

    விஜய் தேவரகொண்டா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். ரசிகர்களுடன் டச்சில் இருக்கிறார். ரசிகர்களுடன் டச்சில் இருக்க ரவுடி ஆப்பை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் தற்போது டியர் காம்ரேட் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    அது ஏன் 'இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு முன்பு பார்த்திபன் ராஜினாமா செய்தார்? அது ஏன் 'இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு முன்பு பார்த்திபன் ராஜினாமா செய்தார்?

    English summary
    Vijay Deverakonda is th only actor who has made it to Forbes 30 under 30.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X