»   »  தெறிக்கு அபார வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி! - விஜய்

தெறிக்கு அபார வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி! - விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெறி படத்துக்கு அபார வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

அட்லி இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்த தெறி படம் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக உலகெங்கும் நேற்று முன்தினம் வெளியானது. கடந்த இரு தினங்களாக இந்தப் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளது.


Vijay happy over the success of Theri

தமிழகத்திலும கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் இந்தப் படத்துக்கு அபார வரவேற்பு தந்துள்ளனர்.


ரசிகர்களின் வரவேற்பால் ‘தெறி' படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள பெரும்பாலான அரங்குகளில் இந்தப் படம் வெளியாகவில்லை. என்றாலும், படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு, இந்தப் பகுதியின் பல அரங்குகளின் உரிமையாளர்களை யோசிக்க வைத்துள்ளது. திங்கள் கிழமையிலிருந்து படத்தைத் திரையிட சிலர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில் ரசிகர்கள் கொடுத்த பெரிய வரவேற்புக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். 'தெறி படம் அனைவருக்கும் பிடித்த படமாக வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி' என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Vijay has expressed his happiness over the success of Theri movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil