twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபாவளிக்கு ஹிட் அடித்த விஜய் படங்கள்! எஸ்டிடி அமோகமா இருக்குங்கண்ணா…!

    தீபாவளிக்கு இதுவரை பதினோரு விஜய் படங்கள் ரிலீஸாகியுள்ளன

    |

    சென்னை: தீபாவளிக்கு ரிலீஸான விஜய் படங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

    நடிகர் விஜய் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து 26 வது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறார்.

    விஜய்யின் 62வது படமாக ரிலீஸாகும் சர்கார் படத்திற்கு தீபாவளிக்கு ரிலீஸாகும் 12வது விஜய் படம் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

    ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது பாஸ்... நச்சென்று சொன்ன நடிகர் ஷாருக்கான்!ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது பாஸ்... நச்சென்று சொன்ன நடிகர் ஷாருக்கான்!

    ப்ரியமானவளே

    ப்ரியமானவளே

    தீபாவளி ரிலீஸ் என விஜய் படங்கள் கோதாவில் இறங்குவதற்கு பிள்ளையார் சுழி போட்ட படம் சந்திரலேகா. நம்பிராஜான் இயக்கிய இப்படம் இந்து முஸ்லீம் காதல் கதையை மையப்படுத்தியது. 1995 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸானது. இப்படம் வசூல்ரீதியாக தோல்வியடைந்தது. அடுத்ததாக 2000ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸான படம் ப்ரியமானவளே. கல்யாணத்திற்க்கு முன்னாடி ஒருவருட ஒப்பந்தம் போட்டு வாழுதல் என புதிய முயற்சியை இயக்குனர் கே.செல்வ பாரதி எடுத்தார். அழகான காட்சி அமைப்புகள், நச் வசனங்கள் என படத்தில் ரசிக்கும் பல விஷயங்கள் இருந்தன. விஜய் சிம்ரன் கூட்டணியும் மிகச்சிறப்பாக இருந்தது. பொதுவாக பெண்களுக்கு பிடித்த நடிகராகா விஜய் அவதாரம் எடுத்தார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தின் மூலம் விஜய்யின் தீபாவளி வெற்றி ஆரம்பமானது என சொல்லலாம். இது பவித்ர பந்தம் என்ற தெலுங்கு படத்தின் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

    பகவதி

    பகவதி

    2001 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரவி அப்புலு இயக்கத்தில் ரிலீஸான படம் ஷாஜகான். விஜய்யின் லவ்வர் பாய் இமேஜுக்கு காரணமான படம். தளபதி படத்தில் வந்த "அசோக்" என்ற கதாபாத்திரத்தை ரஜினி ரசிகர்கள் எப்படி மறக்க மாட்டார்களோ அதேபோல், எல்லோருடைய காதலையும் சேர்த்து வைக்க போராடிய ஷாஜகான் அசோக்கை விஜய் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். மனதிற்கு நெருக்கமான படமாக அமைந்தாலும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன்பிறகு கமர்ஷியல் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் பகவதி. டீ மாஸ்டர், ஆக்‌ஷன் ஹீரோ, ரொமான்ஸ் என்று எல்லா பக்கமும் பவுண்டரி அடித்தார் விஜய். தொய்வில்லாத திரைக்கதையாக இருந்தும் படம் பெரிதாக ஓடவில்லை.

    சிவகாசி

    சிவகாசி

    விஜய்க்கு மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை உருவாக்கிய படமாக 2003 ஆம் ஆண்டு ரிலீஸான திருமலை அமைந்தது. ரமணா இயக்கிய இப்படத்தில் மீசையை ட்ரிம் செய்து புதிய தோற்றம் கண்டார் விஜய். இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதன்பிறகு தீபாவளி என்றாலே ஞாபகம் வரும் சிவகாசி பெயரில் சிவகாசி திரைப்படம் 2005ஆம் ஆண்டு ரிலீஸானது. இயக்குனர் பேரரசுவின் பஞ்ச் வசனங்கள். பிரகாஷ் ராஜின் வில்லத்தனம், விஜய்யின் நடனம் ஆக்‌ஷன் என பல விஷயங்கள் ஒன்றிணைந்து இப்படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வைத்தன. திருமலை சிவகாசி படங்களுக்கு பிறகு, குளிருக்கு போடுவதுபோல் உள்ளே ஒரு சட்டை வெளியே ஒரு சட்டை போட்டிருப்பவர்கள் ஐடி கார்டு இல்லாமலே விஜய் ரசிகர்கள் என அறியப்படும் நிலை உருவானது.

    வேலாயுதம்

    வேலாயுதம்

    விஜய்யின் பெயருக்கு ஏற்றதாக அமைந்த தலைப்பு அழகிய தமிழ்மகன். பரதன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ரிலீஸானது. "நான் குரு பேசுறேன்... நான் குருதான் பேசுறேன்.. " என்ற வசனத்திலேயே இரண்டு வேடங்கள் என விஜய் நிரூபித்திருந்தார். விஜய் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் என பரபரப்பானாலும் படம் பெரிதாக ஓடவில்லை. அதன்பிறகு மூன்று வருடம் தீபாவளிக்கு ஓய்வு கொடுத்து 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் வெளியானது. இயக்குனர் ராஜா விஜய்யை சூப்பர் ஹீரோவாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி என ஜனரஞ்சகமான படமாகவே இருந்தது. இப்படம் வெற்றிபெறவில்லை என சொல்லப்பட்டாலும், தயாரிப்பாளருக்கு லாபம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    கத்தி

    கத்தி

    ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு ரிலீஸான படம் துப்பாக்கி. விஜய் என்ற நடிகரை ஸ்டைலிஷான மாஸ் ஹீரோவாக மாற்றிய படம். திரைக்கதை, வசனம் விஜய் நடிப்பு என அனைத்திலுமே ஹிட் அடித்தது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் எப்போதுமே விஜய்க்கு முக்கியமான படம்தான். அதேபோல் 2014 ஆம் ஆண்டு முருகதாஸ் விஜய் கூட்டணியில் கத்தி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு கதை தொடர்பான சர்ச்சைகள் வந்தாலும், படத்தில் இரண்டு விஜய் என டபுள் ட்ரீட்டாக அமைந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. விவசாய பிரச்சனைகளை பேசியதற்காக பெரிதும் பாராட்டப்பட்டது.

    சர்கார்

    சர்கார்

    கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸான மெர்சல் திரைப்படம் ஏகப்பட்ட இடையூறுகளை சந்தித்து சரித்திர சாதனை படைத்தது. சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது ரிலீஸாக உள்ளது. மெர்சல் ஏற்படுத்திய அதிர்வலையே இன்னும் ஓயாமல் இருக்கும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு சர்கார் தயாராகிவிட்டது. அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி சர்கார் வெற்றிகரமாக எண்பது நாடுகளில் ரிலீஸாக உள்ளது. இதுவரை தீபாவளிக்கு ரிலீஸாகியுள்ள பதினோரு விஜய் படங்களில் 6 படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Over the period of 26 years in the Cine industry, actor Vijay has acted 62 movies including Sarkar. He has given 6 block buster hit movies out of his eleven Diwali releases.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X