»   »  'வேதாளம்' கெட்டப்பிற்கு மாறிய விஜய் தெறிக்க விடுவாரா?

'வேதாளம்' கெட்டப்பிற்கு மாறிய விஜய் தெறிக்க விடுவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வந்த தெறி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் நடித்திருக்கும் புதிய கெட்டப் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் தெறி படத்தில் அவர் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் விஜய் ஒரே தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களே வெளியாகின.இந்நிலையில் ரசிகர் ஒருவருடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றின் மூலம் அவரது புதிய புகைப்படம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இதில் மொட்டைத்தலையில் லேசாக முடிவளரும் தோற்றத்துடன் விஜய் காட்சியளிக்கிறார். இது தொடர்பான காட்சிகள் அனைத்தையும் லடாக் பகுதிகளில் படம்பிடித்திருக்கின்றனர்.


அஜீத் ஏற்கனவே ரெட், வேதாளம் போன்ற படங்களில் இது போன்ற கெட்டப்பில் நடித்திருந்தார். அஜீத்தின் இந்தத் தோற்றம் அவரது ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றது.


தற்போது விஜய்யும் அது போன்ற ஒரு தோற்றத்தில் நடித்திருப்பதால், விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக இந்தத் தோற்றத்தினை வரவேற்பார்கள் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.


ஏற்கனவே வேதாளம், தெறி என்று அஜீத், விஜய் இருவரும் மாற்றிமாற்றி தங்களது படங்களுக்கு பெயர் சூட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


English summary
Theri: Vijay's new Getup now Revealed, He is look like 'Vedalam' Ajith for this Getup.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil