»   »  ரசிகர்கள்தான் அப்படி... ஆனா அஜீத்தும் விஜய்யும் நிசத்துல இப்படி!!

ரசிகர்கள்தான் அப்படி... ஆனா அஜீத்தும் விஜய்யும் நிசத்துல இப்படி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத்தும் விஜய்யும் பரம வைரிகள் போலத் தோன்றும், வெளியில் அவரது ரசிகர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்தால்.

ஆனால் அவர்கள் இருவருமோ, அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துக் கொள்வது, ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது என நட்பு பாராட்டி வருகிறார்கள்.

சமீபத்தில் அஜீத்தின் வேதாளம் கெட்டப்பைப் பாராட்டி கருத்துக் கூறியுள்ளார் விஜய்.

Vijay praises Ajith's Vedalam getup

விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம் புலி. அதில் விஜய்யின் பாத்திரம் மனித உருவில், ஆனால் மனிதர்களைவிட அதிக சக்தி வாய்ந்த வேதாளம் என வரும்.

அந்தப் படம் வெளியாக சில தினங்களுக்கு முன்புதான் அஜீத்தின் படத் தலைப்பு வேதாளம் என்று வெளியானது. உடனே விஜய்யின் படக் கதை மற்றும் பாத்திரப் படைப்பு தெரிந்துதான் அஜீத் இப்படி தலைப்பு வைத்தார் என ஆன்லைனில் அடித்துக் கொண்டார்கள் அவர்களது ரசிகர்கள்.

அஜித் நடித்துள்ள ‘வேதாளம்' படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ‘டீசர்' சமீபத்தில் வெளியிடப்பட்டது. இணையதளத்தில் வெளியான இதை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். இதற்கு ஏக வரவேற்பு இருந்ததாக செய்திகள் வெளியாகின.

தற்போது அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது, விஜய், வேதாளம் டீசரை பார்த்து ரசித்தார். அத்துடன் நிற்கவில்லை. ‘அஜித் கெட்டப் சூப்பராக இருக்கிறது' என்று மனம் திறந்து பாராட்டியும் உள்ளார்.

இவங்களைப் பாத்தாவகு திருந்துங்கப்பா ரசிகர்களே என இருதரப்பினரையும் ஓட்ட ஆரம்பித்துள்ளனர் மற்ற ரசிகர்கள்.

English summary
Recently actor Vijay has watched Ajith's Vedalam trailer and praised Ajith's getup.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil