»   »  ஆமா.. மாவோ மேட்டர் தவறுதான்.. ஆனா கருத்து சரிதானே!- விஜய் வருத்தம்

ஆமா.. மாவோ மேட்டர் தவறுதான்.. ஆனா கருத்து சரிதானே!- விஜய் வருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மறைந்த தலைவர் மாவோவை ரஷ்ய அதிபர் தவறாகக் கூறியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

நேற்று முன்தினம் நடந்த தெறி இசை வெளியீட்டு விழாவில் ரஷ்ய அதிபர் மாவோ என்று குறிப்பிட்டு ஒரு குட்டிக் கதை சொன்னார் விஜய்.

Vijay regrets for his mistake in Theri stage

சீனாவின் தனிப்பெரும் தலைவர், அசைக்க முடியாத அதிபராகத் திகழ்ந்தவர் மாவோ. இதுகூடத் தெரியாமல் விஜய் பேசிவிட்டாரே... கவனமாக இருக்கக் கூடாதா என்றெல்லாம் நிறைய பேர் கருத்துக் கூறியிருந்தனர். வலைத் தளங்களில் இதுபற்றி பெரிய பரபரப்பே கிளம்பியது.

இதனை அறிந்த விஜய் தன் தவறுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

"பெரிய மேடைகளில் நாம் சில கருத்துக்களை ரசிகர்களுக்காகச் சொல்லும்போது இந்த மாதிரியான தவறுகள் நடந்து விடுகின்றன. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். மற்றபடி நான் சொன்ன கருத்து சரியானதுதான். அது ரசிகர்களைச் சென்றடையும் என நம்புகிறேன்," என விஜய் கூறியுள்ளார் .

Read more about: vijay, theri, விஜய், தெறி
English summary
Actor Vijay is regretting for his mistake in Theri audio function when he talked about Communist leader Mao.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil