»   »  பிஸியான ஷூட்டிங்குக்கு இடையிலும் 'அஞ்சல' சிடியை வெளியிட்டு வாழ்த்திய விஜய்!

பிஸியான ஷூட்டிங்குக்கு இடையிலும் 'அஞ்சல' சிடியை வெளியிட்டு வாழ்த்திய விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது பிஸியான ஷூட்டிங்குக்கு நடுவிலும், திலீப் சுப்பராயனுக்காக அவரது அஞ்சல படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தினார் நடிகர் விஜய்.

பிரபல சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் தயாரித்து வரும் படம் அஞ்சல.

விமல் - நந்திதா நடித்துள்ள இந்தப் படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அதற்கு முன் இசை வெளியீட்டை நடத்திவிட முடிவு செய்து, விஜய்யை அணுக முயற்சித்து வந்தாராம் திலீப்.

Vijay releases Anjala audio

'இடை விடாமல் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்ததால் அவரிடம் சி டி வெளியிட முடியுமா என்றுக் கேட்பதற்கு சற்று தயங்கினேன். இருப்பினும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன். சற்றும் தயங்காமல் உடனே வாங்க என்றுச் சொல்லி சி டி வெளியிட்டார். இந்தப் படத்தின் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள் ஏராளம். அதில் முக்கியமாக விஜய் என்னிடம் அன்று கூறிய ஊக்க வார்த்தைகள்தான். இந்த வார்த்தைகள் திரை உலகில் நான் தயாரிப்பாளராக நீடிக்கவும், வெற்றிப் பெறவும் மிக முக்கிய சக்தியாக இருக்கும்,' என்று நம்பிக்கையுடன் கூறினார் திலிப் சுப்பராயன்.

English summary
Actor Vijay has launched Dileep Subbarayan's Anjala movie audio amidst his busy schedule.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil