Just In
- 23 min ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 44 min ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
- 1 hr ago
செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்!
Don't Miss!
- News
அடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா? பீதியில் மக்கள்
- Sports
இவங்களை எதுவும் செய்ய முடியலை.. விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா.. கையில் எடுத்த "அந்த" மோசமான யுக்தி!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Finance
பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான் ஒரு முறை முடிவு செஞ்சா... - விஜய்

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.
அந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், "மற்ற ஊர்களுக்கும் மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள். ஆனால் மதுரை மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட, அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல குணம் கொண்டவர்கள்.
பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை உள்ளத்தோடு இருப்பார்கள். நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது ஏலே ஏலே என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து இருக்கும்.
இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பாவும் பேசினார்கள். ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம் கொடுத்தது மதுரை மக்கள்தான்,"