»   »  "நாலு வருசம் ஒரு பொண்ணை காதலிச்சேன்..." - விஜய் சேதுபதியின் காதல் கதை!

"நாலு வருசம் ஒரு பொண்ணை காதலிச்சேன்..." - விஜய் சேதுபதியின் காதல் கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதி பேசியது.

சென்னை: விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிப்பில் இந்த வாரம் பிப்ரவரி 2-ம் தேதி 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு கல்லூரிக்கு 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படக்குழுவினர் சென்றிருந்தனர்.

அங்கு பேசிய விஜய் சேதுபதி தனது காதல் தோல்வி கதையை ஜாலியாக மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா ஆகியோர் நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி இருக்ககிறார். இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கல்லூரி கால காதல்

கல்லூரி கால காதல்

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' ப்ரொமோஷனுக்காக ஒரு கல்லூரிக்கு சென்றது படக்குழு. அப்போது மாணவர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் 'உங்களுடைய கல்லூரி கால காதல் பற்றி சொல்லுங்கள்' எனக் கேட்டார்.

4 வருடம் காதலித்தேன்

4 வருடம் காதலித்தேன்

அதற்கு விஜய் சேதுபதி 'நான் ஒரு பெண்ணை 4 வருடம் காதலித்தேன், ஆனால், நான் காதலித்த 4 வருடமும் என்னை அந்தப் பெண்ணிற்கு யார் என்றே தெரியாது.' என ஜாலியாக சிரித்துக்கொண்டே தனது ஒருதலைக் காதலைப் பெற்றிக் கூறினார்.

இன்னொரு காதல்

இன்னொரு காதல்

"அதைத் தொடர்ந்து வீட்டிற்கு அருகே ஒரு பெண்ணை காதலித்தேன். அவரை பக்கத்து வீட்டு பையன் காதலித்து திருமணம் செய்துவிட்டான். பிறகு நான் தைரியமாக காதலைச் சொல்லி அதை ஏற்றுக்கொண்ட பெண்ணையே திருமணம் செய்துக்கொண்டேன்" என ஜாலியாக பகிர்ந்துகொண்டார் விஜய் சேதுபதி.

English summary
Vijay Sethupathi, Gautham Karthik, Gayatri, Niharika played 'Oru nalla naal paathu solren' movie will be released on Friday. Vijay Sethupathi said about his one side love in promotion function, 'I have loved a girl for 4 years, but for 4 years that I was in love with her, She doesn't know me.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil