»   »  மாகாபா ஆனந்த்தின் 'அட்டி'யில் விஜய் சேதுபதி?

மாகாபா ஆனந்த்தின் 'அட்டி'யில் விஜய் சேதுபதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாகாபா ஆனந்த் நடித்திருக்கும் 'அட்டி' படத்தில் விஜய் சேதுபதி கவுரவத் தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிக்க வந்த புதிதில் தனது நண்பர்களுக்காக விஜய் சேதுபதி ஏகப்பட்ட படங்களில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார். நாளடைவில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியைத் தழுவின.

இதனால் மற்றவர்களின் படங்களில் கவுரவத் தோற்றத்தில் தோன்றுவதைத் தவிர்த்து, தன்னுடைய சொந்தப் படங்களில் மட்டும் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார்.

Vijay Sethupathi Cameo Appearance in Atti

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின் மாகாபா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும், 'அட்டி' படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறாராம்.

வட சென்னை பகுதியில் நண்பர்கள் வழக்கமாக சந்திக்கு இடங்களை அட்டி என்று கூறுவார்களாம். அந்த வார்த்தை நன்றாக இருந்ததால் அதனையே தனது படத்திற்கு தலைப்பாக இயக்குநர் விஜய பாஸ்கர் வைத்து விட்டாராம்.

Vijay Sethupathi Cameo Appearance in Atti

இப்படத்தின் தலைப்பை விளக்கும் வகையில் பாடலொன்றை இசையமைப்பாளர் சுந்தர்.சி பாபு உருவாக்க, படத்தின் தலைப்பை நடிகர் விஜய் சேதுபதி தனது பங்கிற்கு விளக்கியிருக்கிறாராம்.

அஜீத் ரசிகராக மாகாபா ஆனந்த் நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஸ்விதாவும் முக்கிய வேடங்களில் மொட்டை ராஜேந்திரன், அருள்தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

வருகின்ற ஜூலை 7ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

English summary
Sources said Vijay Sethupathi Play a Cameo Appearance in Makapa Anand's Atti.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil