»   »  உழைப்பாளர் தினத்தன்று 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கம் கொடுத்த விஜய் சேதுபதி

உழைப்பாளர் தினத்தன்று 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கம் கொடுத்த விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு தெரிந்து விஜய் சேதுபதி என்ற மனிதனுக்கு இதுவரைக்கும் மரியாதை இருந்ததே இல்லை. எனக்கு மரியாதையோ, அங்கீகாரமோ, அடையாளமோ அது சினிமா மட்டுமே என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சினிமாவில் மூத்த கலைஞர்கள் 100 பேருக்கு தலா ஒரு புவன் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மே 1ம் தேதி சென்னையில் நடந்தது. 100 கலைஞர்களுக்கு தனது செலவில் நடிகர் விஜய் சேதுபதி தங்க பதக்கம் வழங்கினார்.

விழாவில் பேசிய அவர் கூறும்போது,

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இங்கு பேசிய அனைவருமே விஜய் சேதுபதி கொடுத்தார் கொடுத்தார் என்றார்கள். தமிழ் சினிமாவில் இருந்து எடுத்தேன், அதனால் அங்கேயே கொடுத்துவிட்டேன். எனக்கு தெரிந்து விஜய் சேதுபதி என்ற மனிதனுக்கு இதுவரைக்கும் மரியாதை இருந்ததே இல்லை. எனக்கு மரியாதையோ, அங்கீகாரமோ, அடையாளமோ அது சினிமா மட்டுமே.

நடிகன்

நடிகன்

விஜய் சேதுபதி என்ற நடிகனுக்கு தான் சினிமாவில் மரியாதை. எங்கு சென்றாலும் சிரித்த முகத்தோடு வரவேற்கிறார்கள் என்றால் சினிமா எனக்கு கொடுத்த ஒரு பெரிய பாக்கியமாக பார்க்கிறேன். அதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கான வாய்ப்பை நண்பர், தோழர், அண்ணன் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம் ஜனநாதன் சார் கொடுத்துள்ளார். இந்த சிந்தனையை அவர் என்னிடம் கூறிய போது முதலில் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

எங்கு சென்றாலும் சினிமா தான் எனக்கு எல்லாமே என சொல்லிக் கொண்டே இருப்போம். அந்த சினிமாவுக்கு நாம் என்ன செய்தோம் என ஒன்று உள்ளது. ஒருவர் நாயகனாகிவிட்டால் அவனை மதிக்கிற விதம், கொண்டாடுகிற விதம் என எனக்கு 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் அனைவரிடமுமிருந்து வந்தது. எனது படங்களின் லைட் மேன், அரங்கு அமைப்பாளர்கள் என அனைவருமே மதித்தார்கள்.

மரியாதை

மரியாதை

'தென்மேற்கு பருவக்காற்று' சமயத்தில் அப்படத்தின் லைட்மேன் தங்கியிருக்கும் விடுதிக்குள் சென்றேன். எனது முதல் படம், 10 நாட்கள் தான் படப்பிடிப்பு போயிருக்கும். அங்கு பெரிய வரவேற்பு கொடுத்து சாப்பாடு போட்டார்கள். அந்த இடத்தில் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். எனக்கே இன்னும் திரையுலகில் மரியாதை கிடைக்கவில்லை, அதற்குள் இவ்வளவு மரியாதையா என வியந்தேன் என்றார் விஜய் சேதுபதி.

English summary
Actor Vijay Sethupathi gifted one sovereign gold medals to 100 senior people of cinema industry on May 1st.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil