»   »  சண்டைக் காட்சியில் நடிக்கையில் கண்ணில் காயம்: விஜய் சேதுபதி மருத்துவமனையில் அனுமதி

சண்டைக் காட்சியில் நடிக்கையில் கண்ணில் காயம்: விஜய் சேதுபதி மருத்துவமனையில் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தர்மதுரை படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் நடிகர் நிஜமாகவே குத்தியதில் விஜய் சேதுபதியின் கண்ணில் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஜய் சேதுபதி தற்போது தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தேனியில் நடந்து வருகிறது. அங்கு சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கினர். காவல் நிலையம் முன்பு விஜய் சேதுபதி ரவுடிகளுடன் மோதும் காட்சி படமாக்கப்பட்டது.

Vijay Sethupathi injured in Dharmadurai shoot, hospitalised

அப்போது ஸ்டண்ட் நடிகர் ஒருவர் ஓங்கிக் குத்துவது போல் நடிக்கையில் விஜய் சேதுபதியின் இடது கண்ணில் நிஜமாக குத்திவிட்டார். குத்து விழுந்ததும் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். அவரது கண் சிவந்ததுடன் வீங்கியது.

இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தூங்கி எழுந்த பிறகும் அவரது கண்ணில் வலி குறையாமல் இருந்தது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்து எக்ஸ்ரே எடுத்த டாக்டர்கள் அவரது கண் நரம்பு வீங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து மறுநாள் அவர் வீக்கம் உள்ள கண்ணுடன் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார்.

    English summary
    Vijay Sethupathi was hospitalised in Madurai after he was injured in his left eye while doing a stunt scene for the upcoming movie Dharmadurai.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil