twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சேதுபதி பேராசை பிடித்தவரா?: சீதக்காதி இயக்குனர் விளக்கம்

    By Siva
    |

    Recommended Video

    விஜய் சேதுபதியால் முடியுமா என்று சந்தேகப்பட்ட இயக்குனர்- வீடியோ

    சென்னை: தனது சீதக்காதி பட ஹீரோ விஜய் சேதுபதி பற்றி பேசியுள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

    பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி படம் கடந்த வாரம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி வெறும் 40 நிமிடங்கள் தான் வந்தார்.

    தனது 25வது படமாக விஜய் சேதுபதி சீதக்காதியை தேர்வு செய்துள்ளார். இது குறித்து பாலாஜி தரணிதரன் கூறியதாவது,

    சீதக்காதி

    சீதக்காதி

    நான் நல்ல கதைக்காக காத்திருக்க தயங்காதவன். சீதக்காதி என் மூன்றாவது படம். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை அடுத்து காளிதாஸ் ஜெயராமை வைத்து ஒரு பக்க கதை படத்தை எடுத்தேன். அது தியேட்டரில் ரிலீஸாகவில்லை. படத்தின் உரிமையை ஜீ5 வாங்கியுள்ளது. விரைவில் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாகும்.

    கோவில்

    கோவில்

    என்னை பொறுத்தவரை கடவுள் இல்லை. எனக்கு அவரை தெரியாது. ஆனால் யாராவது கோவிலுக்கு செல்லும்போது உடன் வருமாறு வலியுறுத்தினால் நான் நிச்சயம் செல்வேன். அது அவர்களின் நம்பிக்கை. யாருடைய நம்பிக்கையையும் குறைகூறக் கூடாது. அவரவருக்கு அவரவர் நம்பிக்கை.

    இரண்டாம் பாகம்

    இரண்டாம் பாகம்

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஆசையாக உள்ளது. ஆனால் அதற்கு சரியான கதை கிடைக்க வேண்டும். இரண்டாம் பாகம் எடுப்பது தற்போதைக்கு நடக்காது என்றே எனக்கு தோன்றுகிறது. விஜய் சேதுபதி பேராசை பிடித்த நடிகர் அல்ல. அவர் பிற கலைஞர்களுக்கும் ஸ்பேஸ் கொடுப்பவர்.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அதே போன்று நானும் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். முதலில் சீதக்காதி படத்தில் நடிக்கிறேன் என்று சேது சொன்னபோது ஜோக்கடிக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் தற்போது பார்த்தால் ஐயா கதாபாத்திரம் அவருக்காகவே எழுதப்பட்டது போன்று உள்ளது என்றார் பாலாஜி தரணிதரன்.

    English summary
    Seethakaathi director Balaji Tharaneetharan said that Vijay Setupathi is not a greedy actor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X