»   »  60 நாள்ள தர்மதுரையை முடிச்சிடுங்க... தயாரிப்பாளருக்கு நிபந்தனை விதித்த விஜய் சேதுபதி

60 நாள்ள தர்மதுரையை முடிச்சிடுங்க... தயாரிப்பாளருக்கு நிபந்தனை விதித்த விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 60 நாட்கள் கால்ஷீட் தருகிறேன் அதற்குள் தர்மதுரை படம் முழுவதையும் முடித்து விடுங்கள் என்று அப்படத்தின் தயாரிப்பாளருக்கு நிபந்தனை விதித்திருக்கிறாராம் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 வது பாகமாக வசந்தகுமாரன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் விஜய் சேதுபதி.


Vijay Sethupathi New Condition

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த இப்படத்தை சுரேஷ் என்பவர் தயாரிக்க முன்வந்தார். ஆனால் தயாரிப்பாளர், விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அப்படம் நின்று போனது.


தற்போது பல மாதங்கள் கழித்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட சமாதன உடன்படிக்கையின் பேரில் தர்மதுரை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் விஜய் சேதுபதி.


விஜய் சேதுபதியை தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகம் செய்த சீனு ராமசாமி இப்படத்தை இயக்குகிறார். சில நாட்களுக்கு முன்னர் பூஜை போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனி வட்டாரப் பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது.


இந்நிலையில் 60 நாட்கள் கால்ஷீட் தருகிறேன் அதற்குள் படத்தை முடித்து விடுங்கள் என்று தயாரிப்பாளர் சுரேஷிடம் கறாராக சொல்லி விட்டாராம் விஜய் சேதுபதி.


இதனால் தற்போது வேகமாக படப்பிடிப்பை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு இயக்குனரும், தயாரிப்பாளரும் தள்ளப்பட்டிருக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா, சிருஷ்டி டாங்கே இருவரும் நடிக்கவிருக்கின்றனர்.

English summary
Seenu Ramasamy's Dharma Durai the Shooting Underway in Theni Regions. Now Vijay Sethupathi Said New Condition for this Movie Producer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil