»   »  தல 57: அஜீத்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

தல 57: அஜீத்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்-சிவாவின் 'தல 57' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 வது முறையாக அஜீத்-சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில் அஜீத்துக்கு வில்லனாக இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay Sethupathi Play antagonist in Thala 57

இப்படத்தில் வில்லன் வேடத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் விஜய் சேதுபதியை படக்குழு அணுகியதாக கூறப்படுகிறது.

'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய்யின் விக்டர் வேடம் மிகவும் பேசப்பட்டது. அதேபோல இப்படத்தின் வில்லன் வேடமும் மிக அழுத்தமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

நடிக்க முக்கியத்துவம் உள்ள வேடமேன்பதால் விஜய் சேதுபதி கிட்டத்தட்ட சம்மதித்து விட்டார் என்றும் கூறுகின்றனர். இப்படத்தில் காமெடி வேடத்திற்கு சந்தானம் பெயரும், ஹீரோயினாக நயன்தாரா, அனுஷ்கா, ரித்திகா சிங், எமி ஜாக்சன் பெயர்களும் அடிபட்டு வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்திருக்கிறார். மற்றொருபுறம் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை இது வெறும் வதந்திதான் என்றும் பேச்சுகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.

'சுந்தரபாண்டியன்' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Vijay Sethupathi Play Antagonist in Thala 57. But the Official Confirmation not yet to be Released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil