»   »  வட சென்னையில் விஜய் சேதுபதி நடிப்பது உண்மைதான்- தனுஷ்

வட சென்னையில் விஜய் சேதுபதி நடிப்பது உண்மைதான்- தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'வட சென்னை'யில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து வெளியான வதந்திகளுக்கு நடிகர் தனுஷ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் 'வட சென்னை'. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இது தனுஷ்-விஜய் சேதுபதி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவில்லை. சிறப்புத் தோற்றத்தில் தான் நடிக்கிறார் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay Sethupathi Play a Cameo in Vada Chennai says Dhanush

நடிகர் தனுஷும் தனது பங்கிற்கு இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து ''விஜய் சேதுபதி 'வட சென்னை' படத்தில் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். மகிழ்ச்சி'' என தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

இது விஜய் சேதுபதி ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. தனுஷ் ரசிகர்களும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என தனுஷிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

விரைவில் வில்லன் குறித்த விவரங்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Dhanush Said ''Vijay Sethupathi will be playing a very important extended cameo in vada chennai. Very happy''.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos