»   »  போலீஸ், டாக்டர்... அடுத்து வக்கீலாக ‘றெக்க’ கட்டும் விஜய் சேதுபதி

போலீஸ், டாக்டர்... அடுத்து வக்கீலாக ‘றெக்க’ கட்டும் விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: றெக்க படத்தில் விஜய் சேதுபதி வக்கீலாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரஞ்சு மிட்டாய் படத்துக்குப் பிறகு பி கணேஷ் தயாரிக்கும் படம் இது. அதாவது விஜய் சேதுபதியின் சொந்தப் படம்.


நானும் ரவுடிதான், சேதுபதி, காதலும் கடந்து போகும் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்த விஜய் சேதுபதி, அடுத்ததாக றெக்க என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.


லட்சுமிமேனன் ஜோடி...

லட்சுமிமேனன் ஜோடி...

'வா டீல்' படத்தை இயக்கிய ரத்தினசிவா இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.


வழக்கறிஞராக...

வழக்கறிஞராக...

இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி வழக்கறிஞராக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்குக்காக வழக்கறிஞர்கள் எடுக்கும் ரிஸ்க் தான் படத்தின் கதைக்களமாம்.


கடத்தல்...

கடத்தல்...

இதற்காக பெண் ஒருவரைக் கடத்துவதும், அதைத் தொடர்ந்து என்னென்ன மாதிரியான பிரச்சினைகளில் விஜய் சேதுபதி சிக்குகிறார் என்பது தான் றெக்க படத்தின் கதை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


மனிதன்

மனிதன்

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதன் படத்தில் உதயநிதி வழக்கறிஞர் வேடத்தில் தான் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதியும் வழக்கறிஞர் ஆகி இருக்கிறார்.


அஜித் வில்லன்...

அஜித் வில்லன்...

இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும் மூத்த வழக்கறிஞராக நடிக்கிறாராம். ‘வேதாளம்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த கபீர் சிங், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.


விதவிதமான கேரக்டர்கள்...

விதவிதமான கேரக்டர்கள்...

சேதுபதி படத்தில் போலீசாக நடித்த விஜய் சேதுபதி, தர்மதுரை படத்தில் டாக்டரானார். தற்போது அதனைத் தொடர்ந்து வக்கீலாகி இருக்கிறார். வித்தியாசமான கதைகளாக நடித்து வந்த விஜய்சேதுபதி, தற்போது விதவிதமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


English summary
Pooja of Vijay Sethupathi’s Rekka happened on Friday (May 6) in Chennai. In the film, Vijay Sethupathi is said to be playing a role of an advocate, who later kidnaps a girl and what next forms the crux of the story.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil