»   »  அதெப்படி அஜீத்தை சந்திக்கலாம்?: விஜய் சேதுபதி மீது மனைவி கோபம்

அதெப்படி அஜீத்தை சந்திக்கலாம்?: விஜய் சேதுபதி மீது மனைவி கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி அஜீத்தை சந்தித்து பேசியதால் அவரின் மனைவி கடும் கோபத்தில் உள்ளாராம்.

அஜீத் சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரை சந்தித்து பேச விரும்பியுள்ளார் விஜய் சேதுபதி. இதையடுத்து அவர் அஜீத்தை சந்திக்க விருப்பம் தெரிவிக்க தலயும் படப்பிடிப்பு தளத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

உடனே விஜய் சேதுபதி விவேகம் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.

அஜீத்

அஜீத்

விஜய் சேதுபதி படங்களை தேர்வு செய்யும் விதம், அவரது தன்னம்பிக்கை மற்றும் பிறருக்கு உதவி செய்யும் குணம் ஆகியவற்றை அஜீத் மனதார பாராட்டியுள்ளார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறீர்கள் அதை தொடரவும். பிறருக்கு உதவி செய்வதை ஒருபோதும் நிறுத்திவிட வேண்டாம். தற்போது போன்றே எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன் இருங்கள் என்று அஜீத் விஜய் சேதுபதியிடம் தெரிவித்துள்ளார்.

மனைவி

மனைவி

அஜீத்தை சந்தித்த பிறகு வீட்டிற்கு சென்ற விஜய் சேதுபதி தலயை பார்த்தேனே என்று தன் மனைவி ஜெஸியிடம் கூறியுள்ளார். அவர் மகிழ்ச்சி அடைவதற்கு பதில் கோபம் அடைந்துள்ளார்.

தல ரசிகை

தல ரசிகை

விஜய் சேதுபதியின் மனைவி அஜீத்தின் தீவிர ரசிகையாம். அப்படி இருக்கும்போது தன்னையும் அழைத்துச் செல்லாமல் இப்படி தனியாக போய் பார்த்துள்ளீர்களே என்று தான் ஜெஸிக்கு கோபமாம்.

English summary
Vijay Sethupathi's wife is angry with him as he met Ajith Kumar recently. It is noted that Vijay Sethupathi's wife is a die hard fan of Ajith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil