»   »  சொந்தப் படம் தயாரிக்கும் விஜய் சேதுபதி?

சொந்தப் படம் தயாரிக்கும் விஜய் சேதுபதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதியின் நடிப்பில் நேற்று வெளியான நானும் ரவுடிதான் படம், மீண்டும் அவரை வெற்றிப் பாதைக்கு திருப்பியிருக்கிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது இறைவி, காதலும் கடந்து போகும் போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்.

Vijay Sethupathi's Next Project

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ரத்ன சிவஞானத்தின் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. ரத்ன சிவஞானம் அருண் விஜயை வைத்து இயக்கிய வா டீல் படம் இன்னும் வெளியாகவில்லை.

அதற்குள் அவருக்கு விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காதல், கமெர்ஷியல் மற்றும் ஆக்க்ஷன் கலந்து உருவாகவிருக்கும் இப்படம் விரைவில் தொடங்கவிருக்கிறது.

இயக்குனரின் மீதுள்ள நம்பிக்கையால் இந்தப் படத்தை தானே தயாரித்து, நடிக்கவிருக்கிறாராம் விஜய் சேதுபதி. விரைவில் இப்படத்தைப் பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Vijay Sethupathi Next to Team up with Director Rathina Shiva Gnanam. Sources Said "the film to be a Commercial Entertainer mix of Comedy,Love and Action, Title and another Details will be Finalized soon".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil