»   »  சிவகார்த்திகேயன், ஜீவாவுடன் மோதும் விஜய் சேதுபதி?

சிவகார்த்திகேயன், ஜீவாவுடன் மோதும் விஜய் சேதுபதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி- லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'றெக்க' அக்டோபர் 7ம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், கே.எஸ்.ரவிக்குமார், ஹரிஷ் உத்தமன், கபீர் சிங் மற்றும் சதீஷ் நடிப்பில் வளர்ந்து வரும் படம் 'றெக்க'.

Vijay Sethupathi's Rekka Clash with Remo and Kavalai Vendam

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை காமன் மேன் புரொடக்ஷன்ஸ் சார்பில் கணேஷ் தயாரித்து வருகிறார். பரபர ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வரும் 'றெக்க' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதன்முறையாக ஸ்டைலிஷான ஆக்ஷன் ஹீரோவாக விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் தொடர் ஹிட் ராசி, மாறுபட்ட கதை ஆகியவற்றால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

இந்நிலையில் அக்டோபர் 7 ம் தேதி ஆயுத பூஜை தினத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் 'ரெமோ', ஜீவாவின் 'கவலை வேண்டாம்' ஆகிய படங்கள் அன்று வெளியாகவுள்ளன.

இந்நிலையில் 'றெக்க' படமும் ஆயுத பூஜை ரேஸில் இணைவதால் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Vijay Sethupathi- Lakshmi Menon Starrer Rekka may be Released on October 7.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil