twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம்: நேரத்தை வீண்டிக்காதீர்கள்: விஜய் சேதுபதி கோரிக்கை

    |

    சென்னை: 'என்னாச்சு' என்ற ஒற்றை வார்த்தை மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. கதை தான் முக்கியம் நரை முக்கியம் இல்லை என தைரியமாக சூது கவ்வும் படத்தில் வயதான கேரக்டரில் வந்து கலக்கினார்.

    சிறிய வேடங்களில் தன் சினிமாப் பயணத்தை துவக்கிய விஜய் சேதுபதீன்று வித்தியாசத்திற்கு பேர் போன திறமையான நடிகர். ராஜபாளையத்தை சேர்ந்த விஜய்சேதுபதி, திருமணம் ஆனவர். மனைவி, சென்னையில் தனியார் நிறுவன அதிகாரி. இரு குழந்தைகள்.

    குறும்படங்கள் இயக்குவதிலும் விஜய் சேதுபதிக்கு ஆர்வம் அதிகம். ஆனால், ரசிகர் மன்றம் திறக்க மட்டும் அனுமதி தர மாட்டேன் என்கிறார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது...

    வெற்றிக்குப் பின்னால்...

    வெற்றிக்குப் பின்னால்...

    இந்த வெற்றிக்கு இயக்குனர்கள் தான் காரணம். அவங்க உழைப்பை, படப்பிடிப்பில் பக்கத்திலிருந்து பார்க்கிறேன். அனைவரும் என் நண்பர்கள். அவர்கள் திறமை மீது நம்பிக்கை இருந்தது. மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி, படங்களை கொடுத்தனர்.

    கதைத்தேர்வு சூட்சுமம்...

    கதைத்தேர்வு சூட்சுமம்...

    கதையை வைத்துதான், படத்தின் வெற்றியை, ரசிகர்கள் தீர்மானிக்கிறாங்க. பொழுது போக்கிற்காக, படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு கதை திருப்தியாக இருக்க வேண்டும். கதை சொல்லும் போதே, ரசிகர்களுக்கு பிடிக்கும் என, பொறி தட்டும். அதில் நம்பிக்கையுடன் நடிக்கிறேன். கதையில் நெருடல் இருந்தால், இயக்குனர்களிடம் கேட்டு, சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்வேன்.

    ரசிகர்கள் தெளிவானவர்கள்...

    ரசிகர்கள் தெளிவானவர்கள்...

    இன்றைக்கு, தகவல் தொடர்பு எளிதாகி விட்டது. படம் நன்றாக வந்திருக்கிறதா? என, பார்ப்பதில், ரசிகர்கள் தெளிவாக உள்ளனர். "பீட்சா படம் முதலில் சரியாக போகவில்லை. அடுத்த நாட்களில், ரசிகர்கள் பார்த்து வித்தியாசத்தை உணர்ந்து, மற்றவர்களுக்கு சொல்ல... ஹிட் ஆனது. நல்ல படங்களாக பார்த்து பண்ணினால் போதும். ரசிகர்களே மற்றவர்களுக்கு எடுத்து சென்று விடுவர்.

    விரைவில் ரிலீஸ்...

    விரைவில் ரிலீஸ்...

    இயக்குனர் பாலகிருஷ்ணனின் "ரம்மி, இயக்குனர் கோகுலின் "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இயக்குனர் அருணின் "பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடிக்கிறேன்.

    ரோல் மாடல்...

    ரோல் மாடல்...

    ரோல் மாடல் யாரும் கிடையாது. பொதுவாக, அனைத்து நடிகர்களின் படங்களையும் பார்த்து ரசிப்பேன். அதிலிருந்து, நல்ல அம்சங்களை கருத்தில் கொள்வேன். அத்துடன் சரி.

    சொந்த வேலையைப் பாருங்கப்பா...

    சொந்த வேலையைப் பாருங்கப்பா...

    எனக்கு ரசிகர் மன்றங்கள் கிடையாது. ரசிகர் மன்றங்களை என்றைக்கும் திறக்க மாட்டேன். சொந்த வேலையை விட்டு விட்டு ரசிகர் மன்றத்துக்கு வேலை செய்து அவர்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்' என அறிவுரை கூறுகிறார் விஜயசேதுபதி.

    English summary
    Recently some fans requested Vijay Sethupathi that they are very much interested in starting a fan club for him. But Vijay Sethupathi politely refused and said that ” I’m not interested with fan clubs and I don’t want people to leave their work and doing all sorts of dedication to a star”.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X