»   »  ரஜினி, கமல், அஜீத், விஜய் வேண்டாம்: வியக்க வைத்த விஜய் சேதுபதி

ரஜினி, கமல், அஜீத், விஜய் வேண்டாம்: வியக்க வைத்த விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: றெக்க படத்தில் ரஜினி, கமல், அஜத், விஜய் வேண்டாம் என்று கூறி சிவகார்த்திகேயனின் மான் கராத்தே பட போஸ்டரை தேர்வு செய்து சிவா போன்று போஸ் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

ரத்னசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் றெக்க. அடுத்த மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது. இந்த ஆண்டு விஜய் சேதுபதி ஆண்டு என்று கூறும் அளவுக்கு அடிக்கடி அவரது படங்கள் வெளியாகி வருகின்றன.

வெள்ளிக்கிழமை வந்தால் விஜய் சேதுபதி படம் ரிலீஸாகும் என்று கூறும் அளவுக்கு உள்ளது.

5 ஹிட்

5 ஹிட்

சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை என தொடர்ந்து 5 ஹிட் படங்களை கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தான் அவரது றெக்க படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது.

மான் கராத்தே

மான் கராத்தே

ரெறக்க படத்தில் வரும் விர்று விர்று பாடலை தியேட்டரில் படமாக்கியுள்ளனர். தியேட்டரில் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே போஸ்டர் உள்ளது. மேலும் விர்று பாடலில் விஜய் சேதுபதி மான் கராத்தேவில் சிவா செய்யும் போஸ் போன்றே போஸ் கொடுத்திருப்பார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜீத், விஜய், தனுஷ் ஆகியவர்களில் யாராவது ஒருவருடைய படத்தை தான் விஜய் சேதுபதியிடம் தேர்வு செய்ய சொல்லியிருக்கிறார் இயக்குனர். விஜய் சேதுபதியோ சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தை தேர்வு செய்துள்ளார்.

சிவா ஏன்?

சிவா ஏன்?

ரஜினி, கமல் போஸ்டர்களை அனைவரும் தங்களின் படங்களில் பயன்படுத்துவதால் தனது சமகால நடிகர் அதுவும் தனக்கு போட்டியாக கருதப்படுபவரான சிவாவை கொண்டாடுவது சரி என்று பட்டதால் மான் கராத்தேவை தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

ரெமோ

ரெமோ

அக்டோபர் 7ம் தேதி றெக்க வெளியாகும் அதே நாளில் தான் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படமும் ரிலீஸாகிறது. ரெமோ படத்தில் சிவா பெண் வேடம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Sethupathi has chosen Sivakarthikeyan over Rajinikanth, Kamal Haasan, Ajith and Vijay.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos