விஜய் சேதுபதி, சந்தீப் கிஷான் கூட்டணியில் மைக்கேல்...டைட்டில் லுக் வெளியானது

சென்னை : மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி கலக்கி இருந்ததைத் தொடர்ந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகி வருகின்றனர்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்த ஒப்பந்தமாகியுள்ளார் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ், ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் படு பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி இப்பொழுது நடிகர் சந்தீப் கிஷான் உடன் கூட்டணி அமைத்து அதிரடியான ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் ரத்தக்கறையுடன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நட்பேதுணை

நட்பேதுணை

யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சந்தீப் கிஷான் தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமான இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வர தமிழ் சினிமாவிலும் இப்போது தனி இடத்தை பிடித்துள்ளார். யாருடா மகேஷ் படத்தின் மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து மாநகரம் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், நரகாசுரன் மற்றும் இப்பொழுது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கசடதபற என தரமான படங்களை கொடுத்து வரும் சந்தீப் கிஷான் தமிழில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நட்பேதுணை படத்தின் தெலுங்கு ரீமேக் A1 எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வரும் இவர் A1 எக்ஸ்பிரஸ் படத்தை தயாரித்தும் இருந்தார்.

கலாட்டா கல்யாணமாக

கலாட்டா கல்யாணமாக

தற்பொழுது தெலுங்கில் வெளியாகி பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் விவாஹ போஜனம்பு என்ற படத்தையும் தயாரித்து சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் கலாட்டா கல்யாணமாக உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. நீண்ட காலமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வரும் சந்தீப் கிஷான் அடுத்ததாக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

லவ் த்ரில்லர்

லவ் த்ரில்லர்

விஜய் சேதுபதியின் புரியாத புதிர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடிக்கு எதிர்பார்த்த அளவிற்கு அந்த திரைப்படம் கைகொடுக்கவில்லை. ஆரவாரமில்லாத லவ் த்ரில்லர் படமாக வெளியான புரியாத புதிர் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்திருக்க மகிமா நம்பியார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அடுத்ததாக இயக்கிய இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது. நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ரொமான்டிக் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திகட்டாத காதலை கொட்டித் தீர்த்தது குறிப்பாக இப்படம் காதலர்களை வெகுவாக கவர்ந்தது.

யாருக்கும் அஞ்சேல்

யாருக்கும் அஞ்சேல்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் அந்த ஆண்டு வெளியான மிகச்சிறந்த காதல் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக ஆக்சன் மற்றும் ஹாரர் கதைக்களத்தில் படத்தை இயக்கப்போவதாக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி தெரிவித்திருந்தார். அதன்படி நடிகை பிந்து மாதவி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடிக்க அந்த படத்திற்கு "யாருக்கும் அஞ்சேல்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அடர்ந்த காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட யாருக்கும் அஞ்சேல்" படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. திரிஷா, நயன்தாரா,கீர்த்தி சுரேஷ், தமன்னா ஆகியோரைத் தொடர்ந்து நடிகை பிந்து மாதவியும் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் அடுத்து வரும் "யாருக்கும் அஞ்சேல்" இவருக்கு வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மைக்கேல்

மைக்கேல்

யாருக்கும் அஞ்சேல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆக்ஷன் கதையை இயக்க இருப்பதாக ரஞ்ஜித் ஜெயக்கொடி தெரிவித்திருந்ததை அடுத்து இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க சந்தீப் கிஷான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தி பேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இந்தப் படத்தை இணைந்து வெளியிட உள்ளனர். பாரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்கின்றனர் . தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் இப்படம் உருவாகிறது. அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு "மைக்கேல்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் போஸ்டர் மிரட்டலாக தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி ஆக்சன் ரோலில்

விஜய் சேதுபதி ஆக்சன் ரோலில்

அதில் ரத்தக் கறைகள் உடன் ஒரு கையில் விலங்கு போட்டு இருக்க மற்றொரு கையில் கூர்மையான ஆயுதத்தை கையில் ஏந்தியவாறு மிரட்டலாக போஸ்டர் உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஸ்பெஷல் ஆக்சன் ரோலில் நடிக்க உள்ளார் என போஸ்டரிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் அதிக கவனத்தைப் பெற்றுள்ள இதன் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளது என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X