»   »  விஜய் சேதுபதிக்கு இந்த வருஷக் கோட்டா இன்னும் ரெண்டு இருக்கு...!

விஜய் சேதுபதிக்கு இந்த வருஷக் கோட்டா இன்னும் ரெண்டு இருக்கு...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் சேதுபதிக்கு வரிசையாக படங்கள் வருவதை இணையவாசிகள் செமையாக கிண்டலடித்து வருகிறார்கள்.

முக்கியமாக, இன்று சத்யம் தியேட்டரில் விஜய் சேதுபதியின் தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க மூன்று படங்களும் ஓடவிருக்கின்றன. சமீபகாலங்களில் இந்த சாதனையை வேறெந்த ஹீரோவும் செய்ததில்லை. இனியும் செய்ய முடியாது.

Vijay Sethupathy's 2 more movies to release this year

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை விஜய் சேதுபதிக்கு ஆறு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. அவரே றெக்க மேடையில் 'எல்லாம் முன்னாடி நடிச்சது... ஒரே நேரத்துல ரிலீஸ் ஆகுது' என சமாளித்தார்.

இந்த ஆண்டிற்கான விஜய் சேதுபதி கோட்டாவில் இன்னும் இரண்டு படங்கள் சேர்கின்றன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்துக்கொண்டிருந்த இடம்பொருள் ஏவல் படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனை நேற்று அதன் இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் உறுதிபடுத்தினார். விஜய்சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். விஜய்சேதுபதி சொன்னதுபோல இது தர்மதுரைக்கு முன்பே வெளியாக வேண்டிய படம்.

அடுத்து விஜய்சேதுபதி - காயத்ரி நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் மெல்லிசை. இதுவும் நீண்ட வருடங்களாக கிடப்பில் கிடந்த படம். அடுத்த மாதம் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.

அடுத்து விஜய் சேதுபதி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறார். ஆக, அடுத்த வருஷமும் விஜய் சேதுபதி ஆண்டுதான்!

    English summary
    So far, Vijay Sethupathy's 6 movies released this year and two more to come at the end of this year.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil