»   »  விஜய்க்கு கொங்குத் தமிழ் ஓகே.. மெட்ராஸ் தமிழ் டபுள் ஓகே... நெல்லைத் தமிழ்?

விஜய்க்கு கொங்குத் தமிழ் ஓகே.. மெட்ராஸ் தமிழ் டபுள் ஓகே... நெல்லைத் தமிழ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "லே -டே -ஓய்" என்று - வார்த்தைக்கு முன்னும் பின்னும் போட்டுக் கொண்டால் அது நெல்லைத் தமிழ்.. இதுதான் தமிழ் சினிமா வகுத்து வைத்திருக்கும் இலக்கணம். நிஜத்தில் நிலைமை வேறு, பாஷையும் அப்படி இல்லை என்றாலும் கூட, இப்படித்தான் தமிழ் சினிமாவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ரொம்ப காலமாக.

அந்தக் காலத்து ஹீரோக்கள் அந்தந்த மண் மணம் வீசும் வகையிலான வசனங்களை நல்ல பயிற்சிக்குப் பின்னர்தான் பேசி நடிப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. அந்தந்த லோக்கல் பாஷை பேசத் தெரிந்தவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு அப்போதைக்கப்போது கேட்டுத் தெரிந்து கொண்டு பேசி முடித்து விட்டு போய் விடுகிறார்கள்.

Vijay speaks Nellai Tamil in 'Vijay 60'

முழுமையாக பயிற்சி எடுத்து மண் மணம் கமழும் வகையிலான வசனங்களைப் பேசுவோர் வெகு குறைவு. அதை விட பொருத்தமான நடிகர்கள் இன்று இல்லை என்பதுதான் உண்மை.

பிரகாஷ் ராஜ் மதுரைக்காரராக நடித்துள்ளார். நெல்லைக்காரராக நடித்துள்ளார்... அதைப் பார்த்தபோது செம காமெடியாக இருந்தது. ஆனாலும் மனிதர் சமாளித்து நடித்து விட்டார்.. ரொம்பப் பெரிய அளவில் டேமேஜ் இல்லாமல்.

அட, நம்ம அஜீத்தைக் கூட தூத்துக்குடி தமிழில் நடிக்க வைத்தனர். ஆனால் இவரும் மதுரைத் தமிழ் பேசி நடித்து பெரிய அளவில் சொதப்பினார் - ரெட் படத்தில். ஆனால் தூத்துக்குடித் தமிழை அந்த அளவுக்கு கொல்லவில்லை.

இப்போது விஜய்.. இவரும் நெல்லைத் தமிழுக்குப் புகுந்துள்ளார். தற்போது விஜய் நடித்து வரும் படத்தில் நெல்லைத் தமிழ் பேசி நடித்து வருகிறாராம் விஜய். இதற்காக சிறப்பு பயிற்சியாளர் ஒருவரை வைத்துக் கொண்டு அவரது அறிவுறுத்தலின்படி வசனம் பேசி நடிக்கிறாராம் விஜய்.

விஜய்க்கு மெட்ராஸ் பாஷை சூப்பராக வரும்.. கோயம்பத்தூர் பாஷையும் பக்காவாக வரும்.. நெல்லைத் தமிழில் எப்படிப் பேசியிருக்கிறார்னு தெரியலையேடே!

English summary
Actor Vijay is speaking Nellai Tamil in his 60th movie and the story is also based in Nellai it seems.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil