»   »  விஜய் போட்டோ பாத்தீங்களா... ஆனா 23ம் தேதிக்குப் பிறகு விஜய் வேற மாதிரி இருப்பார் பாருங்களேன்!

விஜய் போட்டோ பாத்தீங்களா... ஆனா 23ம் தேதிக்குப் பிறகு விஜய் வேற மாதிரி இருப்பார் பாருங்களேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்திற்காக விஜய் தனது கெட்டப்பை மாற்ற தாடி வளர்க்கிறாராம்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்து வரும் மெகா பட்ஜெட் படம் புலி. படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் சிம்புதேவன் பார்த்து பார்த்து எடுத்து வருகிறாராம்.

இந்நிலையில் புலி படம் பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன.

தலைக்கோணம்

தலைக்கோணம்

புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது தலைக்கோணம் பகுதியில் நடந்து வருகிறது. விஜய் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்துமுடித்துவிட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பிவிட்டார். தலைக்கோணத்தில் ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, விதியுலேகா ராமன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

விஜய்

விஜய்

சென்னை திரும்பியுள்ள விஜய் வரும் 23ம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். அப்போது புதிய கெட்டப்பில் வர வேண்டும் என்பதால் விஜய் தாடி வளர்க்கிறாராம்.

சீனா

சீனா

புலி படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே காட்சியாக்க வேண்டி உள்ளது. அவற்றை சீனாவில் படமாக்க திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. ஆனால் சீனாவில் கடும் குளிராக இருப்பதால் அங்கு வேண்டாம் என்று தீர்மானித்துள்ளார்களாம்.

குஜராத்

குஜராத்

இரண்டு பாடல்களை படமாக்க இடம் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அந்த பாடல்கள் பாங்காக் அல்லது குஜராத்தில் படமாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஒரு குத்துப்பாட்டு உள்பட 3 பாடல்களை படமாக்கியுள்ளனர்.

ஹிட்

ஹிட்

புலி படத்தை ரூ.118 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கிறார்களாம். கதை வித்தியாசமானது என்பதால் படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள்.

English summary
Vijay to sport beard for his upcoming mega budget movie Puli.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil