ஷாருக்கான் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய்...என்ன ரோல் ?

மும்பை : ஷாருக்கானை வைத்து அட்லீ ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் புனே மெட்ரோ ஸ்டேஷனில் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பமே ரயில் கடத்தல் சீன். அதை ஹீரோ காப்பாற்றும் ஆக்ஷன் சீன்கள் தான் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, பிரியா மணி, யோகிபாபு உள்ளிட்ட கோலிவுட்டை சேர்ந்த பலரும் நடித்து வருகின்றனர். பேக் கிரவுண்ட் இசையை அனிருத் தான் அமைக்க உள்ளார். பாடல்களுக்கான இசையை தான் ஏ.ஆ.ரஹ்மான் அமைக்க உள்ளாராம்.

Vijay to act in Shahrukh khan - Atlee movie ?

ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஒரே கேரக்டருக்கு ஜோடியாக நயன்தாராவும், மற்றொரு கேரக்டருக்கு ஜோடியாக பிரியா மணியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வில்லனாக ராணா டகுபதி நடிக்க உள்ளாராம். உளவுத்துறை அதிகாரி, கிரிமினல் என இரு ரோல்களில் தான் ஷாருக்கான் நடிக்கிறாராம்.

மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போகிறாராம். விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ. தற்போது ஷாருக்காவை வைத்து இயக்கும் பாலிவுட் படத்திலும் விஜய்யை நடிக்க வைக்க போகிறாராம்.

ஆனால் இதில் விஜய் நடிக்க போவதில்லையாம். அதற்கு பதில் ஷாருக்கானுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட அதிக வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இது பற்றிய உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஒரு மாஸ் ஹீரோவின் படத்தில் மற்றொரு ஹீரோ கெஸ்ட் ரோலில் நடிப்பது சமீப காலமாக சகஜமாகி வருகிறது. மாதவன் முதல் முறையாக தானே இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்தில் தமிழில் சூர்யாவும், இந்தியில் ஷாருக்கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இதே போல் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தில் சல்மான் கானும், சல்மான் கான் நடிக்கும் டைகர் 3 படத்தில் ஷாருக்கானும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இந்த டாப் ஹீரோக்களின் வசதிக்காக மும்மையில் பக்கத்து பக்கத்து செட்களில் பதான் மற்றும் டைகர் 3 படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது ஷாருக்கான் படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு நடனமாட போகிறார் என்ற தகவல் ஜவான் படத்திற்கு மிகப் பெரிய மாஸை உருவாக்கி உள்ளது. இதன் உறுதியான தகவல் எப்போது வரும் ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியுடன் இந்த ஆண்டிடை துவக்கி உள்ள விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் லீட் ரோலில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

சென்னையில் நடக்கும் பீஸ்ட் பாடல் ஷுட்டிங்கை முடித்த பிறகு படக்குழு, அடுத்தக்கட்ட ஷுட்டிங்கிற்காக டெல்லி செல்ல உள்ளது. நவம்பரில் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் தனது ஃபோர்ஷனை முடித்து விட்டு, தளபதி 66 படத்தின் வேலைகளை துவக்க உள்ளாராம் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X