»   »  கேப்டனின் சறுக்கல்கள்

கேப்டனின் சறுக்கல்கள்

Subscribe to Oneindia Tamil

பட்ட காலிலே படும் என்ற பழமொழி கேப்டனுக்கு கரெக்டாக பொருந்தும். தொடர்ச்சியாக சுதேசி, தர்மபுரி, சபரி என அடுத்தடுத்து 3 படங்கள் தோல்வியைடந்துவிட்டதால் மனம் ஒடிந்து போயிருக்கிறாராம்.

அரசியலுக்கு போனதோடு சினிமாவை நிறுத்தியிருக்கலாம். ஆனாலும் விடாமல் நடித்து வரும் கேப்டனுக்கும் பாக்ஸ் ஆபிசுக்கும் பெரிய கேப் விழுந்துவிட்டது.

கடைசியாக வெளிவந்த சபரி படத்தை பெரிதும் நம்பியிருந்தாராம். ஆனால் தனது கட்சிக்கான பிரச்சார படம் மாதிரி எடுத்துவிட்டு மக்களை டிக்கெட் வாங்கச் சொன்னால்.. படம் ஊத்திக் கொண்டுவிட்டது. இதனால் விஜயகாந்த் ஆடிப் போய் இருக்கிறார்.

அடுத்த படம் தனக்கு 150 படம் என்ற நிலையில் ஹிட் கொடுத்து வருஷக்கணக்காச்சே என்ற நொம்பலில் இருக்கிறார் விஜய்காந்த்.

சினிமாவில் அடி ஒரு பக்கம் என்றால் மறு பக்கம் கல்யாண மண்டபத்துக்கு இடி. உச்ச நீதிமன்றமும் அதை இடிக்கச் சொல்லிவிட்டதால், இப்போது தனது கட்சிக்கு புதிய அலுவலகம் தேடிக் கொண்டிருக்கிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil