»   »  ரத்னம் ரூ.85 லட்சம் பாக்கி: கேட்கும் விஜய்காந்த்

ரத்னம் ரூ.85 லட்சம் பாக்கி: கேட்கும் விஜய்காந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தர்மபுரி படத்தில் நடித்த தனக்கு இன்னும் ரூ. 85 லட்சம் சம்பள தரவில்லை என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

லட்சுமி ராயுடன் ஜோடி போட்டு கேப்டன் நடிப்பை பிழிந்த படம் தர்மபுரி. அதில் நடித்ததற்குத் தான் சம்பள பாக்கி வைத்துள்ளாராம் ரத்னம்.

கடந்த வருடம் பொங்கல் பண்டிகையின்போது வெளியான இந்தப் படம் ரசிகர்கள் உள்பட யாரையும் கவராமல் போண்டி வரிசையில் சேர்ந்தது. இதனால் ரத்னத்துக்கு ஏகத்துக்கும் நஷ்டம்.

இந் நிலையில் ரத்னம் மீது விஜயகாந்த் கொடுத்துள்ள புகாரில்,

ஏ.எம்.ரத்னம் என்னை வைத்து தர்மபுரி என்ற படத்தை சென்ற வருடம் தயாரித்தார். இதில் நடிக்க நான் பேசிய சம்பளத் தொகையில் இன்னும் பாக்கி தொகையை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

அதனால் எனக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படமான விக்ரம், திரிஷா ஜோடியாக நடிக்கும் பீமா பட ரிலீசுக்கு முன்பாக கொடுக்கும்படி கேட்டேன். ஆனால் இன்னும் ஏ.எம்.ரத்னம் பாக்கியை கொடுக்கவில்லை.

அதனால் தர்மபுரி படத்தில் நடித்ததற்காக எனக்கு தரவேண்டிய சம்பள பாக்கியான ரூ.85 லட்சத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடமிருந்து வாங்கித் தர வேண்டும் என்று கேப்டன் கேட்டுள்ளார்.

இந்த புகார் குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், ஏ.எம்.ரத்னத்திடம் விசாரித்தார்.

அப்போது, பீமா படம் ரிலீசை தள்ளி வைத்துவிட்டோம். அதனால் பீமா படம் ரிலீஸ் செய்வதற்கு முன்பாகவே விஜயகாந்துக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தந்துவிடுவேன் என்று உறுதிளித்தாராம் ரத்னம்.

சீக்கரமா பணத்தை கொடுத்திருங்க.. இல்லைன்னா கேப்டன் இதில் ஏதோ உள்நாட்டு சதி நடக்குது என்று அறிக்கை விடப்போறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil