twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |

    நடிகர் விஜயகாந்த் தனது பிறந்த நாளையொட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஏழை, எளியவர்களுக்கு ரூ. 15லட்சம் மதிப்புள்ள உதவிகளை வழங்கினார்.

    வரும் 25ம் தேதி விஜயகாந்த் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த ஆண்டுடன் விஜயகாந்த் நடிக்கவந்து 25 ஆண்டுகள் முடிவடைகின்றன.

    சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனது கல்யாண மண்டபமான ஆண்டாள்-அழகர் திருமண மண்டபத்தில்நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் நல நிதியாக ரூ. 1 லட்சம், எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளிக்கு ஐம்பது ஆயிரம், லிட்டில் பிளவர் காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்கு ரூ. 25,000உள்ளிட்ட மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள உதவிகளை விஜயகாந்த் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, அவரது மைத்துனரும், படத் தயாப்பாளருமான சுதீஷ்,விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் மணி, செயலாளர் வசந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

    பிறந்த நாளையொட்டி விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்எனது 25 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் சாதனைகளும் உள்ளன, வேதனைகளும் உள்ளன.சாதனைகளுக்காக நான் இறுமாந்து போனதில்லை, வேதனைகளுக்காக வருத்தப்பட்டதில்லை.

    என்னைப் பாராட்டியவர்களை, வளர்த்து விட்டவர்களை, ஆதரவு கொடுத்தவர்களை நான் என்றுமே மறந்துபோனதில்லை, அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல, எனனை ஒழிக்க நினைத்தவர்களையும், விரட்ட நினைத்தவர்களையும் நான் எப்போதுமே தண்டிக்கநினைத்ததில்லை, அவர்களது எதிர்ப்புகளையும் மீறி இன்று ஆலமரம் போல தழைத்து நிற்பதற்குக் காரணம் எனதுதன்னம்பிக்கைதான்.

    என்னை புகழின் உச்சிக்கு ஏற்றி விட்ட தமிழ் மண்ணுக்கு நான் செய்துள்ள இந்த உதவிகள் போதாது, இன்னும்செய்ய வேண்டும், எவ்வளவோ செய்ய வேண்டும். நான் வாழும் வரை, தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழும் வரைசெய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த வெள்ளி விழா பிறந்த நாளில் தமிழ் மக்களின்அன்பையும்,ஆசியையும்,ஆதரவையும் வேண்டி நிற்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X