»   »  அடுத்த ஆட்டத்திற்குத் தயாரான விஜயகாந்த் மகன்

அடுத்த ஆட்டத்திற்குத் தயாரான விஜயகாந்த் மகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சகாப்தம் படத்தைத் தொடர்ந்து 2 வது படத்திற்கான கதைத் தேர்வில் தற்போது மும்முரமாக இறங்கி இருக்கிறார் விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன்.

சண்முகப் பாண்டியன் நாயகனாக அறிமுகமான சகாப்தம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறத் தவறியது. தொடர்ந்து வேறு படங்கள் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அமைதி காத்தது.

Vijayakanth Son Next Movie

இந்நிலையில் தற்போது மீண்டும் சண்முகப் பாண்டியன் நடிக்கப் போகும் படத்திற்கான கதை விவாதத்தில் கேப்டன் குடும்பத்தினர் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.

இப்படம் அநேகமாக ஒரு வரலாற்றுப் படமாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் விஜயகாந்த் தனது மகனை அடுத்ததாக வரலாற்று படத்தில் பார்க்கவே விரும்புகிறாராம்.

தற்போது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் கதைகளை கேட்டு வருவதாகவும் இவர்கள் கதையை இறுதி செய்து விஜயகாந்திடம் தெரிவிப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.

இந்த வருட இறுதிக்குள் கதையை இறுதி செய்து அடுத்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

English summary
After Sagaptham Movie Vijayakanth Son Sanmuga Pandiyan Now Asking Some Stories for his 2nd Innings, The Official Announcement of this Film will be Released Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil