»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil

மீண்டும் தனது அரதப் பழசான பார்முலாவுக்குத் திரும்புகிறார் விஜய்காந்த். சிபிஐ அதிகாரியாக, கருப்பு நிற ரெயின்கோட், கிளவுஸ்,மோப்ப நாய், ஜீப் சகிதம் வெளிநாட்டு வில்லன்களை புரட்டி எடுக்கப் போகிறார்.

சினிமாவில் தொடர் தோல்விகள், நடிகர் சங்கத்தில் பிரச்சினைகள் என்று ரொம்பவே நொந்து போயிருக்கிறார் விஜயகாந்த்.

கஜேந்திராவைத் தொடர்ந்து நெறஞ்ச மனசும் சொதப்பி விட்டதையடுத்து, அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார் விஜயகாந்த் என்றுஏற்கனவே தெரிவித்திருந்தோம். சிப்பாய் என்ற படத்தின் பெயரையும் கூறியிருந்தோம்.

இப்போது அதில் ஒரு சின்ன கரெக்ஷன். படத்தின் பெயர் பேரரசு என்று மாறியுள்ளது. ரோஜா கம்பைன்ஸ் நிறுவனத் தயாரிப்பில்உருவாகவுள்ள இந்தப் படத்தில் விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடிக்க வழக்கம் போல ஒரு மும்பை குட்டியைப் பிடிக்க உள்ளனர்.

படத்தில் விஜயகாந்த் சிபிஐ அதிகாரியாக வருகிறாராம். விஜயகாந்த் படங்களில் வழக்கமாக இடம் பெறும் பிரகாஷ்ராஜ், மன்சூர்அலிகான், பொன்னம்பலம் ஆகியோருடன் ரமேஷ் கண்ணா, டி.வி புகழ் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாம். உப்பிப் போய் பேரல் மாதிரி ஆகிவிட்ட விஜய்காந்துக்கு இனி தனது ஆக்ஷன் எந்த அளவுக்குகைகொடுக்கும் என்ற சந்தேகமும் வந்துவிட்டது. இதனால் கவர்ச்சியை நம்ப ஆரம்பித்துள்ளார். அதன் விளைவாக பேரரசுவில்மும்தாஜுக்கு இடம் கிடைத்துள்ளது.

படத்தை புதுமுக இயக்குநர் உதயன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஆபாவாணன் (ஊமைவிழிகள்), ரமேஷ் கிருஷ்ணன் (அதர்மம்),தரணி (தில், தூள்), மகாராஜன் (வல்லரசு) ஆகிய இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்தவர்.

படத்திற்கு இசை பிரவீண்மணி, தயாரிப்பு ஆயிஷா-காதர் மொய்தீன்.

விஜயகாந்தின் சினிமா வாழ்க்கை இப்படி போராட்டமாகி விட, நடிகர் சங்கத் தலைவர் பதவியும் அம்பேல் ஆகும் நிலையில் உள்ளது.

கொஞ்ச நாட்கள் ஓய்ந்திருந்த நாடக நடிகர் நல்லதம்பி இப்போது மீண்டும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுடன் வந்துள்ளார். அவர்கூறுவதாவது:

நடிகர் சங்கக் கடனை அடைக்க கலைநிகழ்ச்சி நடத்தும் முன்பு ஒவ்வொரு நடிகரிடமும் நிதி வசூல் செய்தனர். அந்தப் பணமே ரூ.1கோடியைத் தாண்டும். அதை அறக்கட்டளை நிதியில் சேர்த்தார்கள். பின்பு கலைநிகழ்ச்சி நடத்தி கடனை அடைத்தார்கள். ஆனால்கலைநிகழ்ச்சியில் வசூலான தொகை எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை.

கடனை அடைக்க நடிகர் அஜீத் ரூ.10 லட்சம் தந்தபோது, விஜயகாந்த் ரூ.5 லட்சத்தை மட்டுமே வாங்கிக் கொண்டார். அதிகப் பணம்கொடுத்த நடிகராகத் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தார்.

திருட்டி விசிடி ஒழித்தற்காக முதல்வர் ஜெயலலிதாவிற்கு விழா எடுத்தபோது, பல கட்சியைச் சேர்ந்தவர்கள் நடிகர் சங்கத்தில் இருப்பதையும்கூட மறந்து, ஜெயலலிதாவுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் அழைப்பிதழை வெளியிட்டு நடிகர் சங்க மானத்தை வாங்கினார் விஜய்காந்த்என்று குற்றச்சாட்டுக்களை மழையாகப் பொழிகிறார் நல்லதம்பி.

வரும் 30ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நல்லதம்பியின் இந்தக் குற்றச்சாட்டுகளும் அவருக்கு நடிகர் சங்கத்தில்கிடைக்கும் ஆதரவும் கேப்டன் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளதாம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil