»   »  தோஹா பறந்தார் விஜயகாந்த்

தோஹா பறந்தார் விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

கேப்டன் விஜயகாந்த், தான் நடிக்கவுள்ள எம்.ஜி.ஆர் படத்துக்கான லொகேஷன்களைப் பார்ப்பதற்காக மனைவி பிரேமலதாவுடன் கத்தார் தலைநகர் தோஹாவுக்குச் சென்றுள்ளார்.

ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் சினிமா என இரட்டைக் குதிரை சவாரியை சிறப்பாக செய்து வரும் விஜயகாந்த், இரு துறையிலும் சமீப காலமாக தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார்.

அரசியலில் அவரது செல்வாக்கு சரிந்து வருவதாக கருத்துக் கணிப்புகள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றன. சினிமாவிலும் அவர் சமீபத்தில் நடித்து வெளியான சபரி உள்ளிட்ட படங்கள் படு அடி வாங்கின.

இந்த நிலையில்அடுத்து எம்.ஜி.ஆர் என்று பெயரிடப்பட்ட படத்தில் நடிக்கவுள்ளார் விஜயகாந்த். இந்தப் படத்தை எப்படியாது சூப்பர் ஹிட் ஆக்கி விட வேண்டும் என விஜயகாந்த் தீவிரமாக உள்ளார்.

மதுர படத்தை இயக்கிய மாதேஷ் இப்படத்தை இயக்கவுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார் விஜயகாந்த். அவரது கேப்டன் கிரியேஷன்ஸ் சார்பில் மச்சான் சுதீஷ்தான் இப்படத்தை தயாரிக்கிறார்.

வழக்கம் போல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக லொகேஷன் பார்க்க தனது மனைவியுடன் நேற்று கத்தார் தலைநகர் தோஹாவுக்கு விஜயகாந்த் புறப்பட்டுச் சென்றார்.

ஒரு வாரம் அங்கு தங்கி லொகேஷன் பார்க்கவுள்ளாராம் விஜயகாந்த். மேலும் படத்தின் கதையையும் அங்கு வைத்து இறுதி செய்யவுள்ளாராம் கேப்டன்.

வாத்தியாராவது கேப்டனை காப்பாத்தட்டும்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil