»   »  விசா கிடைக்காத விஜய்காந்த்

விசா கிடைக்காத விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் அரசாங்கம். இந்த படத்திற்கு முதலில் எம்ஜிஆர் என்று பெயரை வைக்க முடிவு செய்தார் கேப்டன்.

ஆனால் கேப்டன் அந்தப் பெயரை பதிவு செய்யும் முன்னரே இன்னொருவர் அந்தப் பெயரை பதிவு செய்து வைத்து விட்டாராம்.

இதையடுத்து சர்க்கார் என்று பெயர் வைக்க முடிவெடுத்து எல்லா வேலையும் ஆரம்பித்தனர். இந்தப் பெயரை வைத்தால் வரி விலக்கு கிடைக்காது என எடுத்துக் கூறப்பட்டதால் பெயரை வித்தகன் என்று மாற்றினாராம்.

அதையும் இப்போது மாற்றி அரசாங்கமாக்கிவிட்டனர்.

(படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகும்போது என்ன டைட்டில் இருக்குமோ தெரியவில்லை)

இந்தப் படத்தின் சூட்டிங்கை கனடாவில் 45 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டதாம். இதற்காக கடந்த வாரமே விஜயகாந்த் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் கனடா நாட்டிற்கு செல்வதாக இருந்தது.

ஆனால் இதுவரை விஜயகாந்த் உட்பட எவருக்கும் கனடா செல்ல விசா கிடைக்கவில்லையாம்.

டென்ஷனான விஜயகாந்த் என்னப்பா இது கொடுமையா இருக்கு. கனடாவுக்கு போய் எடுத்தால் தான் அரசாங்கம் நிலைக்குமா என்ன. விசா கிடைக்காவிட்டால் பரவாயில்லை. இந்தியாவுக்குள்ளேயே சூட்டிங்கை ஆரம்பியுங்கள் என்று உத்தரவிட்டுள்ளாராம்.

அது மட்டுமில்லாமல் நடிகை உட்பட எல்லா கலைஞர்களின் கால்ஷீட்டும் வீணாகுது, டைமும் வேஸ்ட்டாகுது. அதனால் கனடா செல்லும் முடிவை கைவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் கேப்டன்.

படத்தை தயாரிப்பது கேப்டனின் மச்சான் சுதீஷ் தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil