twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியில் காலடி வைக்கும் விக்ரம் இந்தியில் நடிக்க விக்ரமுக்கு அழைப்பு வந்திருக்கிறதாம். அதுவும் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் இணைந்து நடிக்கப்போகிறாராம்."பிதாமகன் படம் வரும் வரை நம்ம விக்ரமை அதிகமாக தெரிந்தவர்கள் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மட்டும் தான்.பிதாமகனில் தேசிய விருது வாங்கிய பிறகு இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகி விட்டார் விக்ரம்.குறிப்பாக பாலிவுட்டில் விக்ரமுக்கு ஏகப்பட்ட நடிகர்கள் நண்பர்களாகி விட்டார்கள். சல்மான் கான் விக்ரமின் பழைய படங்களைபார்த்து விட்டு அதை டப்பிங் செய்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.இந்தி பேசிய "சேதுவில் விக்ரம் ரோலில் சல்மான் கான் நடித்திருந்தார். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.விக்ரம் நடித்து எந்தப்படம் வந்தாலும் அதைப் பார்க்கவும், வாங்கவும் இந்தியில் போட்டா போட்டியே நடக்கிறதாம்.கடந்த வருட சிறந்த நடிகருக்கான் களத்தில் கடைசி வரை விக்ரமுக்கு போட்டியாக இருந்தவர் ஹ்ருதிக் ரோஷன். நூலிழையில்தனது வாய்ப்பு போய்விட்டாலும் விக்ரமை இவர் மனதார பாராட்டினாராம்.இந் நிலையில் பாலிவுட்காரர்கள் விக்ரமை வளைத்துப் போட முடிவு செய்துள்ளனர். விது வினோப் சோப்ரா இயக்கவுள்ள இந்தப்படத்தில் இந்திப்பட உலகின் முடிசூடா மன்னனான அமிதாப்பும் முக்கியமான ரோலில் நடிக்கிறாராம்.இந்தப் படத்தில் விக்ரமின் கெட்டப் இதுவரை இல்லாத அளவிற்கு மிக வித்தியாசமாக இருக்குமாம். கமல், ரஜினிக்குஅடுத்தபடியாக இந்தியிலும் விக்ரம் தனது முத்திரையைப் பதிப்பார் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.தெலுங்குப் பட உலகில் கமலஹாசனுக்கு அடுத்தபடியாக இப்போது விக்ரமுக்குத் தான் அதிக ரசிகர்களாம். பிதாமகன் உட்படபெரும்பாலான விக்ரம் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன. இவை அனைத்துமே நல்ல வசூலைத்தந்துள்ளதாம். விக்ரம் படங்கள் என்றால் அங்குள்ள சூப்பர் ஹீரோக்களுக்கு இணையாக நல்ல வரவேற்பு இருக்கிறதாம்.அந்நியன் படம் தெலுங்கில் "அப்ரஜித்டு என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலோடுஎதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு படத்தயாரிப்பாளர்கள் இப்போதே விக்ரமின் கால்ஷீட்டுக்காக கையில்பெட்டியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் தெலுங்கில் நுழைவது குறித்து விக்ரம் இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.இந்தி, தெலுங்கு என பல இடங்களிலிருந்தும் விக்ரமுக்கு வாய்ப்புகள் குவிவதால் இனிமேல் வருடத்திற்கு ஒரு படம் என்றகொள்கையை மாற்றி வருடத்திற்கு 2 படம் நடிக்க முடிவு செய்துள்ளார்.இதற்கிடையே "அந்நியன் படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டலாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் படத்தின் மூலம் விக்ரமுக்குமேலும் ஒரு விருது கிடைக்கலாம் என்றும் பேசப்படுகிறது.இது பற்றி விக்ரமிடம் கேட்டால் அவர் வழக்கம்போல, விருதுகளை இலக்காக வைத்து நான் படங்களில் நடிப்பது கிடையாது.எனக்குள் இருக்கும் நடிகனுக்கு சவாலாக இருக்கும் கேரக்டர்களில் தான் நடிக்கிறேன் என்கிறார்.

    By Staff
    |

    இந்தியில் நடிக்க விக்ரமுக்கு அழைப்பு வந்திருக்கிறதாம். அதுவும் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் இணைந்து நடிக்கப்போகிறாராம்.

    "பிதாமகன் படம் வரும் வரை நம்ம விக்ரமை அதிகமாக தெரிந்தவர்கள் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மட்டும் தான்.பிதாமகனில் தேசிய விருது வாங்கிய பிறகு இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகி விட்டார் விக்ரம்.

    குறிப்பாக பாலிவுட்டில் விக்ரமுக்கு ஏகப்பட்ட நடிகர்கள் நண்பர்களாகி விட்டார்கள். சல்மான் கான் விக்ரமின் பழைய படங்களைபார்த்து விட்டு அதை டப்பிங் செய்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்தி பேசிய "சேதுவில் விக்ரம் ரோலில் சல்மான் கான் நடித்திருந்தார். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.விக்ரம் நடித்து எந்தப்படம் வந்தாலும் அதைப் பார்க்கவும், வாங்கவும் இந்தியில் போட்டா போட்டியே நடக்கிறதாம்.

    கடந்த வருட சிறந்த நடிகருக்கான் களத்தில் கடைசி வரை விக்ரமுக்கு போட்டியாக இருந்தவர் ஹ்ருதிக் ரோஷன். நூலிழையில்தனது வாய்ப்பு போய்விட்டாலும் விக்ரமை இவர் மனதார பாராட்டினாராம்.

    இந் நிலையில் பாலிவுட்காரர்கள் விக்ரமை வளைத்துப் போட முடிவு செய்துள்ளனர். விது வினோப் சோப்ரா இயக்கவுள்ள இந்தப்படத்தில் இந்திப்பட உலகின் முடிசூடா மன்னனான அமிதாப்பும் முக்கியமான ரோலில் நடிக்கிறாராம்.

    இந்தப் படத்தில் விக்ரமின் கெட்டப் இதுவரை இல்லாத அளவிற்கு மிக வித்தியாசமாக இருக்குமாம். கமல், ரஜினிக்குஅடுத்தபடியாக இந்தியிலும் விக்ரம் தனது முத்திரையைப் பதிப்பார் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.


    தெலுங்குப் பட உலகில் கமலஹாசனுக்கு அடுத்தபடியாக இப்போது விக்ரமுக்குத் தான் அதிக ரசிகர்களாம். பிதாமகன் உட்படபெரும்பாலான விக்ரம் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன. இவை அனைத்துமே நல்ல வசூலைத்தந்துள்ளதாம். விக்ரம் படங்கள் என்றால் அங்குள்ள சூப்பர் ஹீரோக்களுக்கு இணையாக நல்ல வரவேற்பு இருக்கிறதாம்.

    அந்நியன் படம் தெலுங்கில் "அப்ரஜித்டு என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலோடுஎதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு படத்தயாரிப்பாளர்கள் இப்போதே விக்ரமின் கால்ஷீட்டுக்காக கையில்பெட்டியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் தெலுங்கில் நுழைவது குறித்து விக்ரம் இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.

    இந்தி, தெலுங்கு என பல இடங்களிலிருந்தும் விக்ரமுக்கு வாய்ப்புகள் குவிவதால் இனிமேல் வருடத்திற்கு ஒரு படம் என்றகொள்கையை மாற்றி வருடத்திற்கு 2 படம் நடிக்க முடிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே "அந்நியன் படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டலாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் படத்தின் மூலம் விக்ரமுக்குமேலும் ஒரு விருது கிடைக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

    இது பற்றி விக்ரமிடம் கேட்டால் அவர் வழக்கம்போல, விருதுகளை இலக்காக வைத்து நான் படங்களில் நடிப்பது கிடையாது.எனக்குள் இருக்கும் நடிகனுக்கு சவாலாக இருக்கும் கேரக்டர்களில் தான் நடிக்கிறேன் என்கிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X