»   »  பூஸ்ட் கொடுக்க வரும் பீமா!

பூஸ்ட் கொடுக்க வரும் பீமா!

Subscribe to Oneindia Tamil

மஜா வுக்குப் பிறகு 2 ஆண்டுகளாக ரசிகர்களை ஏமாற்றி வந்த விக்ரம், பீமா மூலம் ரசிகர்களை உசுப்பேத்த ஓடோடி வருகிறார்.

விக்ரம் நடித்த கடைசிப் படம் மஜா. அது வந்து 2 ஆண்டுகளாகி விட்டது. அதன் பின்னர் பீமாவில் நடிக்க புக் ஆனார். ஆனால் படத்தின் ஷூட்டிங் தொடங்கவே நெடு நாட்களானது. பல்வேறு குழப்பங்கள், பிரச்சினைகளால் படு மெதுவாக வளரத் தொடங்கியது பீமா.

இப்படத்தில் முறுக்கேறிய, புதுப்பொலிவுடன் கூடிய விக்ரமாக சீயான் நடித்துள்ளார். பீமா கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இதையடுத்து அடுத்தடுத்து நிறையப் படங்களில் நடிக்க விக்ரம் முடிவு செய்துள்ளார்.

சுசி.கணேசன், சீமான், ஏவி.எம். ஆகிேயாருடன் அடுத்து இணையவுள்ளாராம் விக்ரம். அடுத்தடுத்து இந்தப் படங்ளில் நடிக்கப் போகிறார்.

பீமாவின் வசனக் காட்சிகளைப் படமாக்கி விட்டார் இயக்குநர் லிங்குச்சாமி. நேற்றுதான் தூத்துக்குடியிலிருந்து படப்பிடிப்புக் குழுவினர் திரும்பினர். தூத்துக்குடியில், ஷெரீன் பங்கேற்ற குத்துப் பாட்டை நடுக் கடலில் கப்பலில் வைத்து கலக்கலாக சுட்டுள்ளனர்.

படத்துக்கே இந்தப் பாட்டுதான் முக்கிய அம்சமாக இருக்குமாம். படம் வந்த பிறகு தமிழ் சினிமா உலகில் புதிய டிரெண்டை பீமா ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார் லிங்குசாமி.

சரி படம் எப்போ ரிலீஸ் என்று தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திடம் கேட்டபோது, ஷூட்டிங் முடிந்து விட்டது. பல தடைகளைத் தாண்டி படத்தை முடித்துள்ேளாம். முதலில் இயக்குநருக்கும், விக்ரமுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். இருவரும் சிறப்பாக ஒத்துழைத்ததால்தான் படத்தை விரைவாக முடிக்க முடிந்தது.

ஒரு கட்டத்தில் நான் படத்தை கைவிட்டு விட்டதாகக் கூட செய்திகள் வந்தன. ஆனால் கடவுள் அருளால் படத்தை நல்லபடியாக முடித்துள்ேளாம்.

மே முதல் வாரத்தில் படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ஆனால் மே மாதத்தில்தான் சிவாஜி தியேட்டர்களுக்கு வருவதால் அனேகமாக பீமா தள்ளிப் போகக் கூடும் என்று தெரிகிறது.

இப்படித்தான் ஷங்கரின் அந்நியன் படம் திரைக்கு வர ரெடியானபோது, சந்திரமுகி, ரஜினியின் தனிப்பட்ட ேவண்டுகோளின் பேரில் தனது படத்தை தாமதப்படுத்தினார் ஷங்கர். இப்போது அேத ஷங்கர், ரஜினியுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் சிவாஜி. எனவே இம்முறையும் விக்ரம் படம் தள்ளிப் போகக் கூடும் என்று கூறப்படுகிறது.

சீக்கிரமா வாம்மா பீமா!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil