»   »  தான்சானியாவில் கந்தசாமி!

தான்சானியாவில் கந்தசாமி!

Subscribe to Oneindia Tamil

விக்ரம் வெளுத்துக் கட்டப் போகும் கந்தசாமி படப்பிடிப்பை தான்சானியா, கென்யா என ஆப்பிரிக்க நாடுகளில் அட்டகாசமாக படம் பிடிக்க உள்ளனராம்.

பீமாவில் பின்னி எடுத்துக் கொண்டிருக்கும் விக்ரம், அடுத்து நடிக்கவுள்ள படம் கந்தசாமி. சுசி.கணேசன்தான் இயக்குநர். தொடர்ந்து விரும்புகிறேன், 5 ஸ்டார், திருட்டுப் பயலே என மூன்று முத்தான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் கணேசன்.

நான்காவது கதையாக கந்தசாமியை விக்ரமிடம் சொன்னபோது ஆஃப் ஆகி விட்டாராம் சீயான். உடனே ஒத்துக் கொண்டு கால்ஷீட்டையும் கொடுத்து விட்டார்.

பீமா முடிவடைந்துள்ள நிலையில் கந்தசாமியாக மாறுகிறார் விக்ரம். அந்நியனுக்குப் பிறகு மஜா கொடுத்த விக்ரம் அதன் பின்னர் புதுப் படம் கொடுக்கவில்லை. இந்த நிலையில், 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அவரது பீமா வெளி வருகிறது.

கந்தசாமியும் விக்ரம் ரசிகர்களுக்குப் பிடித்தமான ஆக்ஷன் படமாகவே இருக்குமாம். இருந்தாலும் சுசி. கணேசனின் முத்திரையும் அழுத்தமாக இருக்குமாம்.

கந்தசாமியில், விக்ரமுக்கு ஜோடி போடவுள்ளவர் ஷ்ரியா. கலைப்புலி தாணுதான் படத்தின் தயாரிப்பாளர். படத்தின் பாடல் காட்சிகளை படு வித்தியாசமாக படமாக்க முடிவு செய்தார் சுசி.கணேசன்.

இதற்காக அவர் தேர்ந்தெடுத்த நாடுகள் கென்யா, தான்சானியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளாம். உடனே ஒ.கே. சொல்லி விட்டாராம் தாணுவும்.

கந்தசாமி, நீ வேகமாக வந்து அசத்து சாமி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil