»   »  கோலிவுட்டின் ராபின்ஹூட்

கோலிவுட்டின் ராபின்ஹூட்

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டின் ராபின்ஹூட்டாக அவதாரம் எடுக்கிறார் விக்ரம்.

பீமாவை வெற்றிகரமாக முடித்துள்ள விக்ரம், அடுத்து அதிரடி செய்யப் போகும் படம் கந்தசாமி. சுசி.கணேசன் இயக்குகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். எனவே படம் குறித்த எதிர்பார்ப்பு கோலிவிட்டில் எகிற ஆரம்பித்துள்ளது.

படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே படம் குறித்த விளம்பரத்தை கொடுக்க ஆரம்பித்து விட்டார் கலைப்புலி தாணு.

படத்தின் கதை இதுதான். சாதாரண ஒரு சாது மனிதன். சமுதாயத்தில் தான் காணும் சம்பவங்களால் விரக்தி அடைகிறான். விரக்தி உச்சத்திற்குப் ேபாக அவன் எப்படி அதை சமாளிக்கிறான் என்பதுதான் கதையாம்.

கிட்டத்தட்ட ராபின்ஹூட் ரேஞ்சுக்கு விக்ரமின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளாம். இதற்கு மேல் எதையும் சொல்ல மறுக்கிறது கந்தசாமி யூனிட். விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஷ்ரியா.

படத்தை ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, தான்சானியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் படமாக்கவுள்ளனர். அடுத்த வாரம் கேமரமேன் ஏகாம்பரத்துடன் சுசி.கணேசன் இந்த நாடுகளுக்குப் பயணித்து ஷூட்டிங் லொகேஷன்களைப் பார்த்து முடிவு செய்யவுள்ளாராம்.

இதுதவிர இத்தாலியிலும் சில காட்சிகளைப் படமாக்கவுள்ளார்களாம். படத்தில் ரகுவரனுக்கு சூப்பர் ரோல் வைத்துள்ளாராம் கணேசன். இதுதவிர ஆந்திராவிலிருந்து ஒரு வில்லனை இறக்குமதி செய்து கொண்டு வருகிறார்கள். வைரமுத்து பாட்டெழுத பேனா பிடிக்கிறார். ஆந்திரத்து தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

விக்ரம் ரசிகர்களுக்கு கந்தசாமி சூப்பர் விருந்தாக அமையும் என சுசி.கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil