»   »  பீமா ஓவர்-கந்தசாமி பராக்!

பீமா ஓவர்-கந்தசாமி பராக்!

Subscribe to Oneindia Tamil

விக்ரம் ரொம்ப காலமாக நடித்து வந்த பீமா ஒரு வழியாக முடிந்து விட்டது. அடுத்து கந்தசாமியாக அவதாரம் எடுக்கிறார் சீயான்.

விக்ரமுக்கு சில நேரங்களில் சில படங்கள் பெரும் சோதனையைக் கொடுத்து விடும். அப்படிப்பட்ட படத்தில் ஒன்றுதான் பீமா. லிங்குச்சாமியின் இயக்கத்தில் ரொம்ப நாட்களாக இப்படத்தில் நடித்து வந்தார் விக்ரம்.

பல்வேறு காரணங்களினால் படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. இழுத்துக் கொண்டே போன பீமா ஒரு வழியாக முடிந்து விட்டதாம். இதையடுத்து பீமாவிலிருந்து மாறியுள்ள விக்ரம், கந்தசாமி படத்திற்காக தயாராக ஆரம்பித்துள்ளார்.

கந்தசாமியை, கலைப்புலி தாணு தயாரிக்கிறார். சுசி.கணேசன் இயக்குகிறார். விக்ரமுக்கு ஜோடியாக ஷ்ரியா நடிக்கிறார். சிவாஜி படம் வெளியாகும் சூட்டோடு விக்ரமுக்கு ஜோடி போடுகிறார் ஷ்ரியா.

கந்தசாமிக்கான புகைப்பட ஷூட்டிங்கை கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களில் எடுக்க விரும்பாத சுசி.கணேசன், போட்டோ எடுப்பதற்காக முட்டுக்காட்டுக்கு பறந்துள்ளார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அருமையான ஸ்பாட்டான முட்டுக்காட்டில் வைத்து விக்ரமும், ஷ்ரியாவும் சூப்பராக போஸ் கொடுக்க, புகைப்படங்களாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.

ராபின்ஹூட் காஸ்ட்யூமில் விக்ரமை விதம் விதமாக புகைப்படம் எடுத்து் தள்ளியுள்ளாராம் சுசி.கணேசன். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறதாம்.

கந்தசாமி, கலக்கு சாமி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil