»   »  ஏக்கம் தீர்ந்த விக்ரம்!

ஏக்கம் தீர்ந்த விக்ரம்!

Subscribe to Oneindia Tamil

பிலிம்ஃபேர் பத்திரிக்கையின் தென்னகப் பதிப்பின் 3வது இதழை நடிகர் விக்ரம் வெளியிட்டார்.

முன்னணி இதழான பிலிம்ஃபேர் தனது தென்னகப் பதிப்பை கடந்த மே மாதம் தொடங்கியது. முதல் இதழை திரிஷா வெளியிட்டார். 2வது இதழை இளைய தளபதி விஜய் வெளியிட்டார். இப்போது விக்ரமின் டர்ன்.

3வது இதழ் விக்ரம் ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கலர்ஃபுல் வெளியீட்டு விழா அக்கார்ட் இன் ஹோட்டலில் நடந்தது.

இதழை வெளியிட்ட பின்னர் சீயான் பேசுகையில், நாட்டின் முன்ணனி திரை இதழான பிலிம்ஃபேரின் தென்னகப் பதிப்பை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இந்த இதழில் என்னைப் பற்றி கவர் ஸ்டோரி போட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பற்றிய செய்தி பிலிம்ஃபேரில் வராதா என்று ஏங்கியதுண்டு. இப்போது அது நனவாகியுள்ளது என்றார்.

இயக்குநர் சுசி.கணேசன், தென்னகப் பதிப்பின் ஆசிரியர் தங்கதுரை, மீடியா மேனேஜர் நிகில் முருகன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil