»   »  சப்பாணி ஆக சீயான் ஆசை!

சப்பாணி ஆக சீயான் ஆசை!

Subscribe to Oneindia Tamil

16 வயதினிலே படத்தை யாராவது ரீமேக் செய்தால், அதில் கமல்ஹாசன் நடித்த சப்பாணி கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சீயான் விக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சுட்ட தோசையை திருப்பித் திருப்பிச் சுடுவதற்குச் சளைக்காதவர்கள் தமிழ் சினிமாக்காரர்கள். ரொம்ப காலமாக ஆங்கிலப் படங்களைச் சுட்டு பல புதுப் புது ஐட்டங்களைப் படைத்தார்கள்.

இப்போது தமிழ்ப் படங்களையே திருப்பிச் சுட ஆரம்பித்துள்ளனர். அதிலும் நான் அவனில்லை படம் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இந்த ரீ ரோஸ்ட்டிங் டிரெண்ட் தமிழ் சினிமாவில் படு வேகம் பிடித்துள்ளது.

இதற்கு முன்னணி இளம் நடிகர்களும் விதி விலக்கல்ல. பில்லா ரீமேக்கில் அஜீத் நடித்து வருகிறார். முரட்டுக்காளை ரீமேக்கில் நடிக்க விஜய் ஆயத்தமாகி வருகிறார்.

இந்த நிலையில் விக்ரமும், ரீமேக் டிரெண்டுக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளார். எல்லோரும் ரஜினி படத்தை ரீமேக் செய்ய ஆர்வமாக உள்ள நிலையில் விக்ரம் மட்டும் வித்தியாசமாக கமல், ரஜினி இணைந்து நடித்த 16 வயதினிலே படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.

70களில் தமிழ் சினிமாவை தடம் புரட்டிப் போட்ட மெகா ஹிட் படம் 16 வயதினிலே. கமல்ஹாசனின் அசத்தல் நடிப்பும், ரஜினியும் ரசிக்க வைத்த வில்லத்தனமும், ஸ்ரீதேவியின் அழகு நடிப்பும் இன்னும் கூட ரசிகர்களால் மறக்க முடியாத அனுபவமாக உள்ளது.

இப்படத்தின் ரீமேக் உருவாக்கப்பட்டால், அதில் கமல் நடித்த சப்பாணி கேரக்டரில் நடிக்க விக்ரம் விருப்பப்படுகிறார். சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் இந்த விருப்பத்தை வெளியிட்டார் விக்ரம்.

அவர் கூறுகையில், கமல் சார் நடித்த சப்பாணி கேரக்டரில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். யாராவது 16 வயதினிலே படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தால் அந்தக் கேரக்டரை எனக்கேக் கொடுக்குமாறு இப்போதே கேட்டுக் கொள்கிறேன்.

கமல் சார் நடிப்பில் பாதியையாவது வெளிப்படுத்த முடிந்தால் கூட போதும், அந்தக் கேரக்டரில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்றார் விக்ரம்.

அப்ப பரட்டைக்கு யாரைப் போடலாம்?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil