»   »  சாமி 2 வுக்கு முன்னாடி ஒரு படம்… விக்ரம் திட்டம்?

சாமி 2 வுக்கு முன்னாடி ஒரு படம்… விக்ரம் திட்டம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இருமுகன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறை வைக்கவில்லையாம். போட்ட காசுக்கு மேலயே வந்துவிடும் என்கிறார்கள். காரணம் இன்றும் நாளையும் கிடைத்த விடுமுறைகள்.

இருமுகனுக்கு அடுத்து சாமி 2 என்று ஆடியோ லான்ஞ்சிலேயே அறிவித்து ஃபைனான்ஸ் பார்த்துவிட்டார் ஷிபு தமீம்ஸ். ஆனால் ஹரி இன்னும் எஸ்3 யை முடிக்கவில்லை. தீபாவளிக்குத்தான் எஸ்3 ரிலீஸ். அதன் பின்னர் ப்ரீ புரடக்‌ஷனுக்கு மூன்று மாதமாவது தேவைப்படும். எனவே அதற்குள் ஒரு படம் நடித்துவிடலாம் என திட்டமிடுகிறார் விக்ரம்.

Vikram to do a movie before Saamy 2

அதற்கு அவர் டிக் அடித்த இயக்குனர் சாக்ரடீஸ். இவர் சசிகுமாரை வைத்து பிரம்மன் படம் இயக்கியவர். அந்த படம் சுமாராகத்தான் போனது. இருந்தாலும் இவரது கதையை நம்பி கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

தயாரிப்பாளர் யார் தெரியுமா? விக்ரமை வைத்து கரிகாலன் என்ற படம் தொடங்கி ட்ராப் ஆனதே அந்த தயாரிப்பாளர் தான்.

மீண்டும் பழைய ஃபார்முக்கு வாங்க விக்ரம்!

English summary
Actor Vikram is planning to do a movie before Hari's Saamy 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil