»   »  கதையை ஓகே செய்துவிட்டு கழட்டிவிட்ட விக்ரம்!

கதையை ஓகே செய்துவிட்டு கழட்டிவிட்ட விக்ரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இருமுகன் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் சமயத்தில் விக்ரமை சந்தித்து ஒரு கதை சொன்னார் பிரம்மன் பட இயக்குனர் சாக்ரடீஸ். கதை பிடித்துப்போகவே அதனை, கரிகாலன் படத்தை துவங்கி அது ட்ராப் ஆனதால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளரை வைத்து பண்ணலாம் என்றும் திட்டமிட்டு இருந்தார் விக்ரம்.

ஆனால் அவரே எதிர்பாராத விதமாக இருமுகன் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே சாமி 2 -க்கான அறிவிப்பை வெளியிட்டார் இருமுகன் தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸ். ஹரி காம்பினேஷன் என்பதால் 'ஷ்யூர் ஹிட் ஆச்சே' என கணக்கு போட்ட விக்ரம் பிரம்மன் இயக்குனரின் படத்தை தள்ளி வைத்துவிட்டு சாமி 2 வில் கவனம் செலுத்துகிறாராம்.

Vikram dropped Bramman director's project

படத்துக்கு த்ரிஷா, ரகுல்ப்ரீத் சிங் என்று இரண்டு ஹீரோயின்களை ஒப்பந்தமும் செய்துவிட்டார்கள். டிசம்பரிலேயே படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

பிரம்மன் இயக்குநர் சாக்ரடீஸை கிட்டத்தட்ட கழட்டியே விட்டுவிட்டாராம் விக்ரம். பாவம் அவர்!

English summary
Actor Vikram has withdrawn from Bramman director's upcoming project for Samy 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil