»   »  விக்ரமின் நல்லிதயம்!

விக்ரமின் நல்லிதயம்!

Subscribe to Oneindia Tamil
Vikram met childrens

புத்தாண்டை மது பார்ட்டி, மாதுக்களுடன் ஆட்டம் என பலரும் கொண்டாடிய நிலையில் சீயான் விக்ரம் மட்டும் படு வித்தியாசமாக, இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 33 குழ்நதைகளுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

இந்த 33 பேருக்கும் அகில இந்திய சீயான் விக்ரம் ரசிகர் மன்றம் மற்றும் விக்ரமின் மனைவி ஆகியோர்தான் அறுவைச் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ ஆய்வுக் கழகமும் இந்த பேருதவியில் பங்கு கொண்டுள்ளது.

முதலில் இந்த யோசனை விக்ரமின் மனைவி ஷைலஜாவுக்குத்தான் தோன்றியது. இதற்கான முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டார். பிறகுதான் விக்ரமின் ரசிகர் மன்றம் இதில் சேர்ந்து கொண்டதாம்

இருதய பிரச்சினைகளுடன் உள்ள குழந்தைகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய உதவுமாறு ஷைலஜாதான் விக்ரமை வற்புறுத்தியுள்ளார். அவரும் ஆர்வத்துடன் நிதியுதவி செய்ய முன் வந்தார்.

இதைத் தொடர்ந்து ரசிகர் மன்றம் மூலமாகவும், செய்தித் தாள்களில் விளம்பரம் செய்து அதன் மூலம் சேர்ந்த நிதியைக் கொண்டு 33 குழநதைகளுக்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாம்.

அறுவைச் சிகிச்சை முடிந்ததும் அவர்களை விக்ரம் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. புத்தாண்டின்போது ஹோட்டல் கிரீன் பார்க்கில் இந்த சந்திப்பு நடந்தது.

33 குழந்தைகளும் நள்ளிரவில் விக்ரமுடன் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து விக்ரம் கூறுகையில், இதை விளம்பரத்திற்காக செய்யவில்லை. இதை விளம்பப்படுத்தாதீர்கள் என்றுதான் கூறியிருந்தேன்.

ஆனால் இதைப் பார்த்து மேலும் பலர் இதுபோன்ற உதவிகளைச் செய்ய முன்வர எனது செயல் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என எனது மனைவிதான் கூறினார். அவர்தான் இந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தார்.

இந்த சிறப்பான சேவைக்கு உதவி புரிந்த ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் ராமச்சந்திரா மருத்துவமனை பொது மேலாளர் ஸ்ரீகுமாரும் உடன் இருந்தார். அவர் கூறுகையில், இது டாக்டர்கள், நடிகர் விக்ரம், அவரது மனைவி ஷைலஜா, ரசிகர் மன்றத்தினர் ஆகியோரின் கூட்டு முயற்சி. அதனால்தான் இதை செய்ய முடிந்தது என்றார்.

வெல்டன் விக்ரம்

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil