»   »  விக்ரமின் 'மூன்று முகம்'

விக்ரமின் 'மூன்று முகம்'

Subscribe to Oneindia Tamil
Vikram
பில்லா ரீமேக்கில் அஜீத் நடித்ததைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தின் இன்னொரு சூப்பர் ஹிட் படமான மூன்று முகம் ரீமேக் ஆகவுள்ளது. இதில் விக்ரம் நடிக்கவுள்ளார்.

ரஜினிகாந்த்தின் மூன்று வித்தியாசமான வேடத்தில் உருவாகி வெற்றி பெற்ற படம் மூன்று முகம். அந்தப் படத்தில் ரஜினி ஏற்று நடித்த டி.எஸ்.பி. அலெக்ஸ் பாண்டியன் என்ற கேரக்டர் இன்றளவும் கூட பாப்புலராக பேசப்படுவதாகும்.

இப்படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்க ஆசைப்படுவதாக முன்பு விக்ரம் கூறியிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ரீமேக் குறித்து விக்ரம் தற்போது தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துள்ளாராம்.

இதுகுறித்து இயக்குநர் ஹரியிடம் பேசியுள்ளாராம். ஏற்கனவே விக்ரமை வைத்து சாமி, அருள் என இரு ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விக்ரம், கந்தசாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வேறு படத்தில் கமிட் ஆகவில்லை. பீமா ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பொங்கலுக்கு பீமா வரக் கூடும் எனத் தெரிகிறது. ஆனால் இதுவரை அது உறுதியாகவில்லை.

'ஆறுச்சாமி' மூன்று முகத்தில் கலக்கட்டும்!

Please Wait while comments are loading...