வெறித்தனமான சூறையாட்டம்... மாஸாக வெளியான மகான் ஃபஸ்ட் சிங்கிள்

சென்னை : கோலிவுட்டின் மிக பிரபலமான டாப் தந்தை -மகன் என்றால் அது விக்ரம், துருவ் தான். இவர்கள் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு மகான் என பெயரிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர்.

முதலில், பல கைகளுடன் பைக்கில் கெத்தாக வரும் விக்ரம் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினர் ஆர்வத்தை தூண்டினர். அதைத் தொடர்ந்து, அனகோன்டா பாம்பு பின்னணியில் இருக்க சிக்ஸ் பேக்குடன் இருக்கும் துருவ்வின் போஸ்டரை வெளியிட்டு மாஸ் காட்டினர். கடந்த மாதம் மகான் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் முடிந்ததாக அறிவித்தனர்.

ஃபஸ்ட் சிங்கிள் வெளியீடு

ஃபஸ்ட் சிங்கிள் வெளியீடு

விக்ரமின் 60 வது படமாக உருவாகி வரும் மகான் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான சூறையாட்டம் பாடல் இன்று வெளியாகும் என இரண்டு நாட்களுக்கு முன் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜின் இந்த பதிவை விக்ரம் ரசிகர்கள் வைரலாக்கினர். இதன்படி இன்று மாலை, வெறித்தனமான சூறையாட்டம் பாடல் வெளியிடப்பட்டது.

செம மாஸ் வீடியோ

செம மாஸ் வீடியோ

செம மாஸாக வெளியான சூறையாட்டம் பாடலை சந்தோஷ் நாராயணனே இசையமைத்து, வி.எம்.மகாலிங்கத்துடன் இணைந்து இந்த ஃபஸ்ட் சிங்கிள் பாடலை பாடி உள்ளார். இந்த பாடலை பாடலாசிரியர் முத்தமிழ் எழுதி உள்ளார். ஏற்கனவே சந்தோஷ் நாராயணனின் அட்டகாசமான பிஜிஎம் உடன் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

 நிஜமான சூறையாட்டம்

நிஜமான சூறையாட்டம்

சூறையாட வாடா என துவங்கிய இந்த பாடல் தாரை தப்பட்டையுடன், கிராமத்து இசையுடன், டிரம்ஸ் மியூசிக்கை கலந்து அமைக்கப்பட்டுள்ளது. நடுக்காட்டுக்குள் இயற்கை சூழலில் இந்த பாடல் பதிவு செய்யப்பட்டுள்ள மேக்கிங் காட்சிகள், திருவிழா காட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

சந்தோஷ் நாராயணனின் தரை லோக்கல் ஆட்டம்

திருவிழாவில் சாமி வேடமிட்டு வருவோரின் சாமியாட்டம், அதற்கு நடுவே முகத்தில் மஞ்சள் மற்றும் பச்சை நிற பொடிகளை பூசிக் கொண்டு, வெறித்தனமாக குத்தாட்டம் போடும் காட்சிகள் ஒரு புறம், தப்பாட்ட கலைஞர்களுடன் தரை லோக்கலாக இறங்கி குத்தாட்டம் போடும் சந்தோஷ் நாராயணன் மறுபுறம் என செமயாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்காக தத்ரூபமான திருவிழா செட்அப்பை உருவாக்க ரொம்பவே மெனக்கெட்டுள்ளார்கள் என்பது மேக்கிங் வீடியோவில் நன்றாக காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே வைரலான ஃபோட்டோ

ஏற்கனவே வைரலான ஃபோட்டோ

முதலில் இந்த படத்திற்கு அனிருத் தான் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அனிருத் இந்த படத்தில் இருந்து விலகியதாகவும், அவருக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போவதாகவும் அறிவித்தனர். இயற்கை சூழலில் சந்தோஷ் நாராயணன் இசைப்பதிவு செய்த ஃபோட்டோக்கள் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

லட்சக்கணக்கில் லைக்குகள்

லட்சக்கணக்கில் லைக்குகள்

விக்ரம் மற்றும் துருவ் ஆகியோரின் போஸ்டர் வெளியீட்டின் போது சந்தோஷ் நாராயணன் இசையமைத்த பேக்கிரவுண்ட் இசை விக்ரம் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த இசையை விக்ரம் ரசிகர்கள் அதற்குள் ஹிட் ஆக்கி விட்டனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபஸ்ட் சிங்கிள், வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் துருவ் போலீஸ் ரோலிலும், விக்ரம் மாறுபட்ட வில்லன் ரோலிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

பண்டிகை நாளில் ரிலீஸ்

பண்டிகை நாளில் ரிலீஸ்

லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள மகான் படத்தில் சிம்ரன், வானி போஜன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் பண்டிகை நாளில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. மகான் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X