»   »  பெண் துப்புரவுத் தொழிலாளியை தேடிப் பிடித்து போட்டோ எடுத்த விக்ரம்!

பெண் துப்புரவுத் தொழிலாளியை தேடிப் பிடித்து போட்டோ எடுத்த விக்ரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சியில் தன்னுடன் படமெடுத்துக் கொள்ள முயன்று முடியாமல் ஏமாற்றமடைந்த ஒரு பெண் துப்புரவுத் தொழிலாளியைத் தேடிப்பிடித்து படமெடுத்துக் கொண்டுள்ளார் நடிகர் விக்ரம்.

இருமுகன் படம் கேரளாவில் பெரும் வெற்றியடைந்துள்ளது. ஷங்கர் இயக்காத விக்ரம் படம் ஒன்றுக்கு கேரளாவில் இந்த அளவு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. ஏன் இந்த வெற்றி என்றால்... விக்ரமின் குணம் அப்படி.

Vikram takes pictures with a sanitary worker

ஒரு சின்ன சாம்பிள்... பட வெளியீட்டுக்கு சில தினங்கள் முன்பு கொச்சியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார் விக்ரம்.

அங்கே விக்ரமுடன் நின்று சிலர் படம் எடுத்து கொண்டிருந்தபோது அங்கே சுத்தம் செய்யும் ஒரு துப்புரவு பெண் தொழிலாளி விக்ரமுடன் படம் எடுக்க ஆசைப்பட்டு நின்று கொண்டிருந்தார். அங்கே வந்திருந்தவர்கள் பெரிய பெரிய ஆட்கள் என்பதால் கொஞ்சம் நேரம் காத்திருந்த பின், இனி படமெடுக்க முடியாது என்று தெரிந்ததும் அந்தப் பெண் அங்கே இருந்து வெளியே சென்றுவிட்டார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விக்ரம், போட்டோ ஷூட் முடிந்ததும், அந்த பெண்ணைத் தேடிப் பிடித்து விட்டார்.

அவர் தோள் மேல் கை போட்டு ஆறுதல் கூறி அதிக புகைப்படங்கள் எடுத்து, அவருக்கும் பிரிண்ட் போட்டுத் தரச் சொன்னார். அப்போது அங்கே இருந்த ஒருவர் அடித்த கமெண்ட்: "விக்ரம் சார்... ஒரு ஹீரோவுக்கும் மேலை...!"

English summary
Vikram has recently was took pictures with a woman sanitary worker at Kochi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil