அடுத்த ராக்கி பாய் இவர் தான்...கன்னடத்திலும் என்ட்ரி கொடுக்கும் விக்ரம்

சென்னை : கோலிவுட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.

Recommended Video

Chiyaan Vikram | 3 Heroines, செம கலாய் | Cobra Trailer Launch | * Launch

டைரக்டர் பாலா இயக்கிய சேது படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல வெற்றி படங்களைக் கொடுத்து வரும் விக்ரம் நடித்துள்ள கோப்ரா ரிலீசிற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது.

தற்போது கோப்ரா படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கேரளா, பெங்களூருவை தொடர்ந்து இன்று ஐதராபாத்தில் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடி, படத்திற்கு ப்ரொமோஷன் செய்ய உள்ளார் விக்ரம்.

வரிசை கட்டும் படங்கள்

வரிசை கட்டும் படங்கள்

கோப்ரா படத்தை தொடர்ந்து செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ள விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்தை வரவேற்கவும் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் அடுத்தடுத்த படங்களிலும் விக்ரம் கமிட்டாகி வருகிறார்.

 கன்னட படத்தில் நடிக்கிறாரா விக்ரம்?

கன்னட படத்தில் நடிக்கிறாரா விக்ரம்?

பா.ரஞ்சித் இயக்கும் சியான் 61 படத்தில் நடிக்க விக்ரம் தயாராகி வரும் நிலையில் கன்னட டைரக்டர் பவன் குமார் இயக்கும் பை லிங்குவல் படத்தில் நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டைரக்டர் பவன்குமார், லூசியா மற்றும் யு டர்ன் படங்களை இயக்கி பிரபலமானவர்.

சாண்டல்வுட்டிலும் என்ட்ரி

சாண்டல்வுட்டிலும் என்ட்ரி

இந்த படம் உறுதியாகும் பட்சத்தில் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் விக்ரம், கன்னட திரையுலகான சாண்டல்வுட்டிலும் என்ட்ரி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 விக்ரமின் 4வது ரிலீஸ்

விக்ரமின் 4வது ரிலீஸ்

ஆகஸ்ட் 31 ல் கோப்ரா, செப்டம்பர் 30 ல் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீசாக உள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் துருவ நட்சத்திரம் படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளதாக கெளதம் மேனன் உறுதி செய்துள்ளார். இந்த ஆண்டில் ரிலீசாகும் விக்ரமின் நான்காவது படமாக துருவ நட்சத்திரம் படம் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X