»   »  படத்தயாரிப்பில் தலையிடும் விக்ரம் – சிக்கலில் படங்கள்

படத்தயாரிப்பில் தலையிடும் விக்ரம் – சிக்கலில் படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரமா இந்த மாதிரி செய்கிறார் என்று இதனைக் கேட்பவர்கள் ஆச்சரியப் படுகிறார்கள். அப்படி என்ன செய்கிறார் என்று கேட்கிறீர்களா விஷயம் இதுதான் சமீப காலமாக தான் நடிக்கும் படங்களின் தயாரிப்பு விஷயத்தில் தலையிடுகிறாராம் விக்ரம்.

இதனால் தற்போது விக்ரம் நடித்து வரும் படங்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது என்று கூறுகின்றனர் கோடம்பாக்கத்தினர், ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக விக்ரம் நடித்து வெளிவந்த படம் ஐ.

2015 ம் ஆண்டின் பொங்கல் வெளியீடாக வெளிவந்த ஐ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் மில்டனின் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இந்நிலையில் விக்ரம் தயாரிப்பு வேலைகளில் தலையிடுவதால் தான் அவரின் படங்கள் தாமதமாகின்றன, என்ற ஒரு பேச்சு தமிழ்த் திரையுலகில் எழுந்துள்ளது.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

சேது படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆனவர் விக்ரம், விக்ரமின் திரை வாழ்க்கையை சேதுவிற்கு முன் சேதுவிற்குப் பின் என்று பிரிக்கக் கூடிய அளவுக்கு அவரின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படம் சேது. இயக்குநர் பாலாவிற்கும் தமிழில் பிரேக் கொடுத்த படம் சேது தான், சேதுவில் முதலில் நடிப்பதாக இருந்த விக்னேஷ் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போக விக்ரமின் வீட்டைத் தேடிவந்து அதிர்ஷ்டலட்சுமி கதவைத் தட்டியது சேதுவின் வடிவத்தில். வசூலில் பயங்கரமாக கலக்கிய சேது விக்ரமின் வாழ்க்கையில் ஒரு பெரிய வசந்தத்தைத் தோற்றுவித்தது. அதனால் தான் இன்றும் பாலாவின் படங்கள் என்றால், ஓடிப் போய் நடிக்கிறார் விக்ரம்.

தமிழின் ஸ்டார் நடிகர்

தமிழின் ஸ்டார் நடிகர்

தொடர்ந்து விக்ரமின் நடிப்பில் வெளிவந்த தில், தூள், சாமி, அந்நியன், கந்தசாமி போன்ற படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்று, வசூலில் பட்டையைக் கிளப்ப தமிழின் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ரஜினி, கமலுடன் போட்டியிடும் அளவிற்கு முன்னேறினார் விக்ரம்.

நடிப்புக்காக தேசிய விருது வென்ற சீயான்

நடிப்புக்காக தேசிய விருது வென்ற சீயான்

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வாங்கி இருக்கிறார் விக்ரம்.

ஷங்கரின் ஐ

ஷங்கரின் ஐ

தமிழின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் அந்நியன் மற்றும் ஐ என இரு படங்களில் நடித்து இருக்கிறார், இதில் ஐ திரைப்படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு உடலை வருத்தி நடித்திருந்தார். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவான ஐ திரைப்படம் வெளியாகி விக்ரமிற்கு நல்ல நடிகர் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது.

10 எண்றதுக்குள்ள

10 எண்றதுக்குள்ள

ஐ படத்திற்குப் பின் கோலிசோடா இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் சமந்தாவுடன் 10 எண்றதுக்குள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தயாரிப்பில் தலையிடும் விக்ரம்

தயாரிப்பில் தலையிடும் விக்ரம்

அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் மர்ம மனிதன் படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். இந்தப் படத்தை முதலில் தாணு தயாரிப்பதாக இருந்த நிலையில் கந்தசாமி படத்தின் போது ஏற்பட்ட பிரச்சினைகளை மனதில் வைத்து இந்தப் படத்தை ஐங்கரன் நிறுவனத்திடம் தயாரிக்க சொல்லி இருக்கிறார் விக்ரம்.

ஆனந்த் சங்கரை அறிமுகப்படுத்தியவர் தாணு

ஆனந்த் சங்கரை அறிமுகப்படுத்தியவர் தாணு

அரிமா நம்பி படத்தின் மூலம் இயக்குநர் ஆனந்த் சங்கரை தமிழ்த் திரையுலகில் அறிமுகப் படுத்தியவரே தாணு தான், ஆனால் மர்ம மனிதன் படம் கை மாறியதைப் பற்றி எந்தத் தகவலையும் தயாரிப்பாளர் தாணுவிடம் கூறவில்லையாம் ஆனந்த் சங்கர்.

சங்கத்தில் புகார் கொடுத்த தாணு

சங்கத்தில் புகார் கொடுத்த தாணு

மர்ம மனிதன் படக்குழுவினர் படப்பிடிப்புக்கு செல்லத் தயாராக இருந்த நிலையில், தாணு இதைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்ததால் படப்பிடிப்புக் குழுவினர் ஷூட்டிங் செல்லாமல் நின்றுவிட்டனர். தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம், விரைவில் படத்தின் நிலவரம் தெரிய வரும் என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாசுடன் மோதல்

ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாசுடன் மோதல்

இதே போன்று 10 எண்றதுக்குள்ள படத்தைத் தயாரித்து வந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விக்ரமின் தாமதத்தால் வெறுத்துப் போய் நீங்களே படத்தைத் தயாரித்துக் கொள்ளுங்கள் என்று பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திடம் கூறி வெளியேறினார். பின்பு நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் தற்போது படப்பிடிப்பு , மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிக்கலில் விக்ரம் படங்கள்

சிக்கலில் விக்ரம் படங்கள்

படத் தயாரிப்பு விவகாரங்களில் விக்ரம் தலையிடுவதால் அவரின் படங்கள் தொடர்ந்து சிக்கலில் மாட்டி வருகின்றன.இதைக் கேள்விப்படும் கோடம்பாக்கத்தினர் விக்ரமா இப்படி என்று ஆச்சரியப் படுகின்றனர். நடிக்கத் தெரிந்த நடிகர் என்று பெயர் வாங்கிய விக்ரம், தற்போது இப்படி நடந்து கொள்வது அனைவர்க்கும் ஆச்சரியத்தை அளிப்பதில் வியப்பேதுமில்லை.

English summary
Actor Vikram Involved In Producers Selection For His Movies, Now Vikram Movie’s Based Many Troubles In Cine Industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil